ஆப்நகரம்

உத்தரகண்டில் ஏற்பட்டுள்ள கடும் நிலச்சரிவால் 13000 பயணிகள் பாதிப்பு!

உத்தரகண்டில் ஏற்பட்டுள்ள கடும் நிலச்சரிவால் 13000 பயணிகள் பாதிப்பு!

TOI Contributor 19 May 2017, 10:40 pm
டெஹ்ராடூன் : உத்தரகண்ட் மாநிலத்தில் ஏற்பட்டுள்ள கடுமையான நிலச்சரிவால் சுமார் 15000 சுற்றுலா பயணிகள் பாதிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
Samayam Tamil landslide in uttarakhand several tourists stuck
உத்தரகண்டில் ஏற்பட்டுள்ள கடும் நிலச்சரிவால் 13000 பயணிகள் பாதிப்பு!


சமோலி மாவட்டம் ஜோஷிமத்தில் இருந்து 9 கிமீ தொலைவில் அமைந்துள்ள விஷ்ணுபிரயாக்கிற்கு அருகில் ஹதி பார்வத் எனும் இடத்தில் கடுமையான நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது. சுற்றுலா பயணிகள், யாத்ரீகர்கள் பத்ரிநாத்திற்கு சார் தம் யாத்திரை மேற்கொண்டிருந்த நிலையில் கடும் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளதால் 13,5000 பேர் வரை பாதிக்கப்பட்டிருப்பதாக முதல் கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன. ரிஷிகேஷ் – பத்ரிநாத் தேசிய நெடுஞ்சாலையில் 60 மீட்டர் வரை பாதிக்கப்பட்டுள்ளது. யாத்ரீகர்கள் யாருக்கும் எந்த பாதிப்பும் இல்லை என்றும் தகவல் வெளியாகியுள்ளது.

எல்லை சாலைகள் அமைப்பு மற்றும் காவல்துறையினர் நிலமையை சரிசெய்ய முயற்சி செய்து வருகின்றனர். நிலச்சரிவு விரைவில் சரிசெய்யப்பட்டு போக்குவரத்து சீர்செய்யப்படும் என்று சமோலி காவல்துறை கண்காணிப்பாளர் திரிப்தி பட் தெரிவித்துள்ளார். மேலும் இது மிகப்பெரிய நிலச்சரிவு என்றும் பத்ரிநாத் சாலை சரியாக இரண்டு நாட்கள் ஆகும் என்றும் எல்லை சாலைகள் அமைப்பினர் தெரிவித்துள்ளனர்.

2015ஆம் ஆண்டு ஒடிஷாவை சேர்ந்த 300 யாத்ரீகர்கள் பெரும் நிலச்சரிவில் தனியாக சிக்கிக்கொண்டனர். நவீன பாதுகாப்பு மற்றும் மீட்பு உபகரணங்கள் நிலச்சரிவு ஏற்பட்டுள்ள இடத்திற்கு கொண்டுவரப்பட்டுள்ளன. நிலச்சரிவு ஏற்பட்டுள்ள பகுதியில் சுமார் 150 வாகனங்கள் நிற்கின்றன என்றும் தகவல் வெளியாகியுள்ளது. இந்நிலையில் சாலை சீராகும் வரை கீழ்நோக்கி வரும் வாகனங்களை நிறுத்தி வைக்கவும் காவல்துறை அறிவுறுத்தியுள்ளது. Uttarakhand: Landslide near Vishnuprayag on Badrinath route; Almost 15,000 tourists stranded. pic.twitter.com/ljE95drmSU — ANI (@ANI_news) May 19, 2017 Uttarakhand: Landslide near Vishnuprayag on Badrinath route; Almost 15,000 tourists stranded. pic.twitter.com/5sTQ63eTQv — ANI (@ANI_news) May 19, 2017

அடுத்த செய்தி