ஆப்நகரம்

ராஜஸ்தான்: லட்சக் கணக்கில் வெட்டுக்கிளிகள் பயிர்களை நாசமாக்கும் காட்சி!

கொரோனாவை தொடர்ந்து விவசாய நிலங்களை நாசமாக்கும் வெட்டுக்கிளிகள் படையெடுப்பு நாட்டில் அதிகரித்துவிட்டது...

Samayam Tamil 26 May 2020, 1:11 am
இந்தியாவில் கொரோனாவுக்கு பின் விவசாய பயிர்களை நாசமாக்கும் வெட்டுக்கிளிகள் படையெடுப்பு அதிகளவில் நடக்கும் என ஐநா விடுத்த எச்சரிக்கை இப்போது நிஜமாக நிகழத் தொடங்கியுள்ளது.
Samayam Tamil ராஜஸ்தான்: லட்சக் கணக்கில் வெட்டுக்கிளிகள் பயிர்களை நாசமாக்கும் காட்சி!
ராஜஸ்தான்: லட்சக் கணக்கில் வெட்டுக்கிளிகள் பயிர்களை நாசமாக்கும் காட்சி!


அமெரிக்கா, இந்தியா உள்பட சில நாடுகளில் குறிப்பிட்ட இடங்களில் பருவ நிலை மாற்றத்தின்போது இந்த வெட்டுக்கிளிகள் அதிகளவில் காணப்படுகின்றன. இந்த வெட்டுக்கிளிகள் ஆண்டுதோறும் வெவ்வேறு இடங்களுக்குப் பரவி வருகின்றன.


இந்த வெட்டுக்கிளிகள் வளர்ந்து கிடக்கும் பயிர்களைக் கத்தரித்து விடுகின்றன. இதன் இனப்பெருக்கமும் அதிகளவில் இருப்பதால் மிக குறைந்த காலத்தில் தனது எண்ணிக்கை பெருக்கி விடுகின்றன.

ராஜஸ்தான் ஜெய்ப்பூர் உள்பட 33 மாவட்டங்களில் விவசாயப் பயிர்களை நாசமாக்கும் இந்த வகை வெட்டுக்கிளிகள் லட்சக்கணக்கில் படையெடுத்துள்ளது. ராஜஸ்தானில் கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு வெட்டுக்கிளிகளால் அதிகளவில் பாதிப்பு காணப்படும் என ஐநா குறிப்பிட்டிருந்தது.

மீண்டும் இந்திய-சீனப் போர்? - 1962 தந்திரத்தை கையில் எடுக்கும் சீனா!

ராஜஸ்தான் மாநில அரசு முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொண்டு நிலைமையைச் சரி செய்ய சில வழிகளை வகுத்துள்ளது. இதற்காக அவசர திட்டத்தை ராஜஸ்தான் அரசு வகுத்துள்ளது.

லட்சக்கணக்கில் உள்ள இந்த வெட்டுக்கிளிகள் ஏற்படுத்தியுள்ள பாதிப்பு குறித்துத் தெளிவான தகவல் வெளியாகவில்லை. ராஜஸ்தான் தலைநகர் ஜெய்ப்பூரிலிருந்து தொடங்கிய இந்த வெட்டுக்கிளிகள் பரவல் தொடர்ந்து அம்மாநிலத்தில் உள்ள அனைத்து மாநிலங்களுக்கும் பரவி வருகிறது.

அடுத்த செய்தி