ஆப்நகரம்

சூரத்தில் பயங்கர தீ விபத்து: 20 பேர் பலி: பிரதமர் மோடி, ராகுல் இரங்கல்!

சூரத்தில் உள்ள பிரபல வணிக வளாகத்தில் நேற்று ஏற்பட்ட தீ விபத்து சம்பவத்தில் 20 பேர் பலியாகியுள்ளனர்.

Samayam Tamil 25 May 2019, 8:22 am
சூரத்தில் உள்ள பிரபல வணிக வளாகத்தில் நேற்று ஏற்பட்ட தீ விபத்து சம்பவத்தில் 20 பேர் பலியாகியுள்ளனர்.
Samayam Tamil Fire.


குஜராத் மாநிலம் சூரத்தில் உள்ள வணிக வளாகத்தில் நேற்று திடீரென்று தீ விபத்து ஏற்பட்டுள்ளது. இதில், 20 மாணவர்கள் பலியாகியுள்ளனர். இது குறித்து சூரத் தீயணைப்பு கட்டுப்பாட்டு அறை அதிகாரி கூறுகையில், 3ஆவது மாடியில் இயங்கி வந்த கல்வி பயிற்சி மையத்தில் மாணவ மாணவிகள் கல்வி பயின்று வந்துள்ளனர்.

அப்போது மின்கசிவு காரணமாக தீ விபத்து ஏற்பட்டுள்ளது. இதில், அதிர்ச்சியுற்ற மாணவ, மாணவிகள் தங்களது உயிரை காப்பாற்றிக் கொள்ள 3ஆவது மாடியில் இருந்து கீழே குதித்துள்ளனர். இதில், 20 பேர் பலியாகியுள்ளனர். மேலும், பலர் காயமடைந்த நிலையில், மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர் என்று குறிப்பிட்டுள்ளதாக கூறப்படுகிறது.

இச்சம்பவத்தில் உயிரிழந்தோரின் குடும்பத்தினருக்கு குஜராத் முதல்வர் விஜய் ரூபானி ரூ.5 லட்சம் நிவாரணம் அறிவித்துள்ளார். இந்த விபத்து குறித்து பிரதமர் மோடி அதிர்ச்சி செய்தி வெளியிட்டதோடு, உடனடியாக தக்க உதவிகள் செய்ய அதிகாரிகள் மற்றும் நிர்வாகிகளுக்கு உத்தரவிட்டுள்ளார்.




இவரைத் தொடர்ந்து பாஜக தேசியத் தலைவர் அமித் ஷா தீ விபத்தில் உயிரிழந்தோரின் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துள்ளார். மேலும், பாஜக தொண்டர்களையும் களத்தில் இறங்கி உதவுமாறும் கேட்டுக்கொண்டுள்ளார்.

தொடர்ந்து காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியும் இச்சம்பவம் அறிந்து பெரும் துக்கமடைந்தேன் என்று குறிப்பிட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்தும் தனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

அடுத்த செய்தி