ஆப்நகரம்

நமாமி கங்கா திட்டம்: 104 இடங்களில் இன்று தொடக்கம்

மத்திய அரசு கங்கை நதியைத் தூய்மைப்படுத்தும் முகமாக 231 திட்டங்களின் ஒருங்கிணைந்த திட்டமான நமாமி கங்கா திட்டம் இன்று தொடங்கிவைக்கப்படுகிறது.

TOI Contributor 7 Jul 2016, 10:51 am
டெல்லி: மத்திய அரசு கங்கை நதியைத் தூய்மைப்படுத்தும் முகமாக 231 திட்டங்களின் ஒருங்கிணைந்த திட்டமான நமாமி கங்கா திட்டம் இன்று தொடங்கிவைக்கப்படுகிறது.
Samayam Tamil launch of 231 ganga revival projects today
நமாமி கங்கா திட்டம்: 104 இடங்களில் இன்று தொடக்கம்


நரேந்திர மோடி தலைமையிலான அரசு கங்கை நதியைச் சுத்தம் செய்ய நமாமி கங்கா என்ற திட்டத்தை அறிவித்திருந்தது. அதன் முதல்கட்டமாக ஆற்றோரங்களில் துறைகள் அமைத்தல், புதிய மயானங்கள் கட்டுதல் மற்றும் சிதிலமடைந்தவற்றை புணரமைத்தல், கரைகளை அழகுபடுத்துதல், கழிவுநீர் சுத்திகரிப்பு அமைப்புகளை பழுதுபார்த்தல் மற்றும் புதிய வடிகால்கள் அமைத்தல் என பல்வேறு திட்டங்களை செயல்படுத்த முடிவுசெய்யப்பட்டுள்ளது.

கங்கை நதிப்படுகை அமைந்துள்ள உத்திரகண்ட், உத்திரப் பிரதேசம், பீகார், ஜார்கண்ட், மேற்கு வங்கம் ஆகிய 5 மாநிலங்களிலும் உள்ள 104 இடங்களில் இந்தத் திட்டம் ஒரே சமயத்தில் தொடங்கவுள்ளது. இத்திட்டத்தின் மதிப்பு ரூ.2000 கோடி என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது.

திட்டத்தின் தொடக்கவிழா நிகழ்வு இன்று ஹரித்வாரில் நடைபெறுகிறது. அதில் மத்திய அமைச்சர்கள் நிதின் கட்கரி, உமா பாரதி, நரேந்திர தோமர், மகேஷ் சர்மா மற்றும் உத்தராகண்ட் முதல்வர் ஹரீஷ் ராவத் ஆகியோர் பங்கேற்கின்றனர்.

முழுநதியும் தூய்மைப்படுத்தப்படுவது வரலாற்று நிகழ்வு என்றும் அக்டோபர் மாதத்தில் இத்திட்டத்தின் முதல் அலகு நிறைவடையும் என்றும் கூறப்படுகிறது. முற்றிலும் அறிவியல் ரீதியான ஆய்வுகளுக்குப் பிறகு இத்திட்டம் தொடங்கப்படுவதாகவும் உலகின் சிறந்த கருவிகள் இத்திட்டத்தில் பயன்படுத்தப்பட உள்ளன என்றும் மத்திய அரசு வெளியிட்ட தகவலில் குறிப்பிடப்பட்டுள்ளது.

அடுத்த செய்தி