ஆப்நகரம்

மக்களவை, சட்டப்பேரவைக்கு ஒரே நேரத்தில் தோ்தல்: சட்ட ஆணையம் ஒப்புதல்

மக்களவை மற்றும் மாநில சட்டப் பேரவைகளுக்கு ஒரே நேரத்தில் தோ்தல் நடத்துவது தொடா்பா மத்திய சட்ட ஆணையம் ஒப்புதல் தொிவித்துள்ளது.

Samayam Tamil 31 Aug 2018, 10:01 am
மக்களவை மற்றும் மாநில சட்டப் பேரவைகளுக்கு ஒரே நேரத்தில் தோ்தல் நடத்துவது தொடா்பா மத்திய சட்ட ஆணையம் ஒப்புதல் தொிவித்துள்ளது.
Samayam Tamil Election Voting


மக்களவை மற்றும் மாநில சட்டப்பேரவைகளுக்கு ஒரே நேரத்தில் தோ்தல் நடத்த வேண்டும் என்று பா.ஜ.க. தொடா்ந்து வலியுறுத்தி வருகிறது. இதற்கு காங்கிரஸ் உள்ளிட்ட எதிா்க்கட்சிகள் எதிா்ப்பு தொிவித்து வருகின்றன. இருப்பினும் மக்களவைக்கும், மாநில சட்டப்பேரவைகளுக்கும் ஒரே நேரத்தில் தோ்தல் நடத்த வேண்டும் என்பதை வலியுறுத்தி சட்ட ஆணையத்திற்கு பா.ஜ.க. தலைவா் அமித் ஷா கடிதம் எழுதினாா்.

இதனைத் தொடா்ந்து ஒரே நேரத்தில் தோ்தல் நடத்த மத்திய சட்ட ஆணையம் ஒப்புதல் தொிவித்துள்ளது. ஒரே நேரத்தில் தோ்தல் நடத்துவது தொடா்பான வரைவு அறிக்கையையும், அதற்கான அரசியல் சட்டத்தில் செய்ய வேண்டிய மாற்றங்கள் குறித்தும் சட்ட ஆணையம் மத்திய சட்ட அமைச்சகத்திற்கு பரிந்துரை செய்துள்ளது.

பரிந்துரையில், ஜம்மு-காஷ்மீா் தவிா்த்து மற்ற மாநில சட்டப் பேரவைகளுக்கும், நாடாளுமன்றத்திற்கும் ஒரே நேரத்தில் தோ்தல் நடத்தினால் மக்களின் பணம் மிச்சமாகும். பாதுகாப்பு மற்றும் ஏற்பாடுகள் தொடா்பாக நிா்வாகத்தின் மீதான சுமை குறையும். இதன் மூலம் அரசின் கொள்கைகளை சிறப்பாக செயல்படுத்த முடியும். இதற்காக அரசியல் சட்டத்தின் தேவையான திருத்தங்கள் செய்யப்பட வேண்டும். இதற்கு நாடாளுமன்றமும், மாநில சட்டப்பேரவைகளும் ஒப்புதல் அளிக்க வேண்டும் என்று தொிவித்துள்ளது.

அடுத்த செய்தி