ஆப்நகரம்

செம சீன் கம்யூனிஸ்ட்; சர்ப்ரைஸ் பாஜக; உள்ளாட்சி தேர்தல் லேட்டஸ்ட் முடிவுகள்!

உள்ளாட்சி தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணப்பட்டு வரும் நிலையில் யார் முன்னிலையில் இருக்கிறார்கள் என்று இங்கே தெரிந்து கொள்ளலாம்.

Samayam Tamil 16 Dec 2020, 3:07 pm
கேரள மாநிலத்தில் அடுத்த ஆண்டு சட்டமன்ற தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், சமீபத்தில் நடந்த உள்ளாட்சி தேர்தல் மிகுந்த முக்கியத்துவம் பெறுகிறது. இதில் பெறும் வெற்றி சட்டமன்ற தேர்தலுக்கு அச்சாரமாக இருக்கும் என்று நம்பப்படுகிறது. மூன்று கட்டங்களாக உள்ளாட்சி தேர்தலில் பதிவான வாக்குகள் இன்று காலை 8 மணி முதல் எண்ணப்பட்டு வருகின்றன. இதற்காக 244 வாக்கு எண்ணும் மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. படிப்படியாக தேர்தல் முடிவுகள் வெளியாகிக் கொண்டிருக்கின்றன.
Samayam Tamil LDF Won in Kerala


திருவனந்தபுரத்தில் 13 வார்டுகளில் தேசிய ஜனநாயகக் கூட்டணி முன்னிலையில் இருக்கிறது. இதையொட்டி பாஜக தொண்டர்கள் உற்சாகமாக கொண்டாடி வருகின்றனர். இங்கு இடதுசாரிகள் 7, காங்கிரஸ் கூட்டணி ஒன்றில் முன்னணியில் இருக்கின்றன. ஆனால் ஒட்டுமொத்தமாக கேரளாவை ஆளும் கம்யூனிஸ்ட் கட்சி பெருவாரியான இடங்களில் முன்னிலை பெற்றுள்ளது.

இடதுசாரிகளை ஓரங்கட்டுமா பாஜக? பரபரப்பான உள்ளாட்சி தேர்தல் முடிவுகள்!

பிற்பகல் 2 மணி நிலவரப்படி,

* கம்யூனிஸ்ட் கூட்டணி 522 கிராம பஞ்சாயத்துகள், 108 ப்ளாக் பஞ்சாயத்துகள், 10 மாவட்ட பஞ்சாயத்துகள், 35 நகராட்சிகள், 3 மாநகராட்சிகளில் முன்னிலையில் பெற்றுள்ளது.

* காங்கிரஸ் கூட்டணி 363 கிராம பஞ்சாயத்துகள், 44 ப்ளாக் பஞ்சாயத்துகள், 4 மாவட்ட பஞ்சாயத்துகள், 45 நகராட்சிகள், 3 மாநகராட்சிகளில் முன்னிலையில் பெற்றுள்ளது.

* தேசிய ஜனநாயகக் கூட்டணி 23 கிராம பஞ்சாயத்துகள், 2 நகராட்சிகளில் மட்டும் முன்னிலையில் இருக்கிறது.

பத்தினம்திட்டா நகராட்சியில் (மொத்தம் 32) இடதுசாரிகள் 13, காங்கிரஸ் 13, மற்றவை 6 வார்டுகளில் முன்னிலையில் இருக்கின்றன. எர்ணாகுளம் எலூர் நகராட்சியில் இடதுசாரிகள் 5, காங்கிரஸ் 4, தேசிய ஜனநாயகக் கூட்டணி 3, சிபிஐ எம்.எல் 1, சுயேட்சைகள் 4 இடங்களில் வெற்றி பெற்றுள்ளன. மேலும் ஆலுவா, அங்கமாளி, திரிகாக்ரா, பெரும்பாவூர், மரடு, கலமாசேரி, நார்த் பரவூர் ஆகிய நகராட்சிகளில் காங்கிரஸ் கூட்டணி முன்னிலையில் உள்ளது.

இந்த நடிகை தான் இனி பாண்டியன் ஸ்டோர்ஸ் முல்லையா? வைரலாகும் தகவல்

திருச்சூர் நகராட்சியின் சாலக்குடியில் காங்கிரஸ் 23, இடதுசாரி 1, மற்றவை 9 வெற்றி பெற்றுள்ளன. குருவாயூரில் காங்கிரஸ் 6, இடதுசாரிகள் 12, மற்றவை 2 இடங்களில் வெற்றி பெற்றிருக்கின்றன. இரிஞ்சிலக்குடாவில் காங்கிரஸ் 5, இடதுசாரிகள் 2, தேசிய ஜனநாயகக் கூட்டணி 3, மற்றவை 2 இடங்களில் வெற்றி பெற்றுள்ளன. குன்னம்குளத்தில் காங்கிரஸ் 3, இடதுசாரிகள் 5, தேசிய ஜனநாயகக் கூட்டணி 2 இடங்களில் வெற்றி பெற்றிருக்கின்றன. வடக்கஞ்சேரியில் காங்கிரஸ் 8, இடதுசாரிகள் 8, தேசிய ஜனநாயகக் கூட்டணி 1 தொகுதியில் வெற்றி பெற்றுள்ளன.

அடுத்த செய்தி