ஆப்நகரம்

சோனியா தலைமையில் திரண்ட எதிர்க்கட்சி தலைவர்கள்!!

எதிர்கட்சித் தலைவர்களின் கூட்டத்திற்கு காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி விடுத்த அழைப்பை ஏற்று 17 கட்சிகளின் தலைவர்கள் கூட்டத்தில் கலந்து கொண்டனர்.

TOI Contributor 26 May 2017, 3:48 pm
எதிர்கட்சித் தலைவர்களின் கூட்டத்திற்கு காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி விடுத்த அழைப்பை ஏற்று 17 கட்சிகளின் தலைவர்கள் கூட்டத்தில் கலந்து கொண்டனர்.
Samayam Tamil leaders of 17 parties are attending the meeting called by sonia gandhi in parliament
சோனியா தலைமையில் திரண்ட எதிர்க்கட்சி தலைவர்கள்!!


காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி கடந்த சில நாட்களுக்கு முன்பு தேசிய மற்றும் மாநில எதிர்க்கட்சித் தலைவர்களின் கூட்டத்திற்கு அழைப்பு விடுத்து இருந்தார். இதை ஏற்று மொத்தம் 17 கட்சிகளின் தலைவர்கள் இன்று டெல்லியில் சோனியா காந்தி தலைமையில் நாடாளுமன்றத்தில் கூடினர். இந்தக் கூட்டத்தில் மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி, ராஷ்டிரிய ஜனதா தளம் லாலு பிரசாத் யாதவ், பகுஜன் சமாஜ் கட்சித் தலைவர் மாயாவதி, திமுக சார்பில் எம்.பி., கனிமொழி, உத்தரப்பிரதேச முன்னாள் முதல்வர் அகிலேஷ் சிங் யாதவ், ஜம்மு காஷ்மீர் முன்னாள் முதல்வர் உமர் அப்துல்லா, முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் உள்பட காங்கிரஸ் தலைவர்களும் கலந்து கொண்டுள்ளனர்.

முன்பு கடுமையாக பிரதமர் மோடியை விமர்சித்து வந்த பிகார் முதல்வர் நிதிஷ் யாதவும் இந்தக் கூட்டத்தில் கலந்து கொள்ளவில்லை. ஆனால், ஜனதா கட்சியின் மூத்த தலைவர் சரத் யாதவ் கலந்து கொண்டார்.

இந்தக் கூட்டத்திற்கு டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு அழைப்பு விடப்படவில்லை என்று கூறப்படுகிறது. ஜனாதிபதி பிரணாப் முகர்ஜியின் பதவிக்ககாலம் அடுத்த மாதத்துடன் முடிவடைகிறது. இந்நிலையில் அடுத்த வேட்பாளரை எதிர்க்கட்சிகள் சார்பில் நிறுத்துவது, எதிர்கொண்டுள்ள குஜராத், ஹிமாச்சலப் பிரதேசம், கர்நாடகா மாநில சட்டசபை தேர்தல் மற்றும் 2019ஆம் ஆண்டு நடக்கவிருக்கும் மக்களவை தேர்தல் குறித்து இந்தக் கூட்டத்தில் விவாதித்தாக கூறப்படுகிறது. பிரணாப் முகர்ஜியை பிகார் முதல்வர் நிதிஷ் குமார் பரிந்துரை செய்தபோது, தனக்கு மீண்டும் விருப்பமில்லை என்பதை பிரணாப் முகர்ஜி சூசகமாக தெரிவித்து உள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில், மேற்குவங்க முன்னாள் கவர்னரும், மகாத்மா காந்தியின் பேரனுமான கோபால கிருஷ்ண காந்தி, ஜனதா தளம் முன்னாள் தலைவர் சரத் யாதவ், மக்களவை முன்னாள் சபாநாயகர் மீரா குமார், தேசியவாத காங்கிரஸ் கட்சித் தலைவர் சரத் பவார் ஆகியோரின் பெயர் எதிர்க்கட்சிகள் தரப்பில் ஜனாதிபதி வேட்பாளர் நியமனத்துக்கு பரிந்துரைக்கப்படுவதாக செய்தி வெளியாகியுள்ளது. ஜனாதிபதி வேட்பாளரை நியமிக்க ஒரு முழு அமைத்து இருப்பதாகவும் அந்தக் குழு விரைவில் பெயரை தேர்வு செய்யும் என்று கூறப்படுகிறது.

கூட்டம் முடிந்த பின்னர் தலைவர்கள் அனைவருக்கும் சோனியா காந்தி மதிய உணவு விருந்து அளித்தார்.

Leaders of 17 parties are attending the meeting called by Sonia Gandhi in Parliament

அடுத்த செய்தி