ஆப்நகரம்

இடதுசாரி ஆதரவாளர்களின் வீட்டுக்காவலை, 17ஆம் தேதி வரை நீட்டித்த உச்சநீதிமன்றம்!

இடதுசாரி ஆதரவாளர்களின் காவலை நீட்டித்து, உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Samayam Tamil 12 Sep 2018, 3:21 pm
டெல்லி: இடதுசாரி ஆதரவாளர்களின் காவலை நீட்டித்து, உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
Samayam Tamil SC


மகாராஷ்டிர மாநிலம் பீமா கோரேகான் பகுதி வன்முறை தொடர்பாக இடதுசாரி ஆதரவாளர்கள் 5 பேர் கைது செய்யப்பட்டனர். அவர்கள் வரவர ராவ், வெர்னான் கோன்சால்வ்ஸ், சுதா பரத்வாஜ், அருண் பெரைரா, கவுதம் நவ்லகா ஆகியோர் ஆகும்.

இந்தக் கைதை எதிர்த்து, வரலாற்று ஆய்வாளர் ரோமிலா தாப்பர் உள்ளிட்ட 5 பேர் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். இதையடுத்து கைது செய்யப்பட்டவர்கள் வீட்டுக் காவலில் வைக்க உத்தரவிடப்பட்டது. மேலும் மகாராஷ்டிர மாநில போலீசாருக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டது.

இதுதொடர்பாக போலீசார் நீதிமன்றத்தில் பதில் மனு தாக்கல் செய்தனர். அதில், மாவோயிஸ்ட் தீவிரவாதிகள் மற்றும் இடதுசாரி ஆர்வலர்கள் இடையே தொடர்பு இருக்கிறது. அதற்கு வலுவான ஆதாரங்கள் உள்ளன. ஆகையால் அவர்கள் கைது செய்யப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது.

இந்த வழக்கு உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா தலைமையில் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது ஆஜரான ரோமிலா தாப்பர் வழக்கறிஞர் அபிஷேக் மனு சிங்வி, வேறு ஒரு வழக்கில் ஆஜராகி இருப்பதால் கால அவகாசம் வேண்டும் என்று வலியுறுத்தினார். இதையடுத்து வரும் செப்டம்பர் 17ஆம் தேதி வரை வீட்டுக்காவலை நீட்டித்து உத்தரவிட்டனர்.

Leftist supporters house arrest extends upto 17th of this month orders SC.

அடுத்த செய்தி