ஆப்நகரம்

பெண்ணும் பெண்ணும் திருமணம் செய்து கொள்ள உதவி செய்த போலீஸ்!

ஓரின சேர்க்கையாளர்கள் ராஜஸ்தானில் திருமணம், எதிர்ப்பு தெரிவித்த பெற்றோரிடமிருந்து பாதுகாத்த ராஜஸ்தான் காவல்துறையினர்.

Samayam Tamil 25 Sep 2019, 4:18 pm
செப். 6, 2018ஆம் ஆண்டு வரலாற்றுச் சிறப்புமிக்க தீர்ப்பு உச்ச நீதிமன்றத்தின் 5 பேர் கொண்ட அமர்வு வெளியிட்டது. அதன்படி, ஓரினச் சேர்க்கை என்பது குற்றமல்ல என்பதும் அவர்கள் திருமணம் செய்வது தவறில்லை என்பதுதான். இந்த தீர்ப்புக்காக, நாடு முழுவதும் பல லட்சம் பேர் தெருக்களில் இறங்கி பல வருடம் போராட்டம் நடத்தினர். போராட்டம் நடத்தி உரிமை பெற்றபோதும், இப்போதும் இந்த விவகாரத்தில் எந்த மாற்றமும் நாட்டில் நடக்கவில்லை என்கிறது ஆய்வுகள்.
Samayam Tamil lgbt_PNG31


இதற்கு உதாரணமாய் ராஜஸ்தான் மாநிலம் அஜ்மீர் மாவட்டத்தில் சமீபத்தில் ஒரு சம்பவம் நடந்துள்ளது. அஜ்மீர் மாவட்டத்தில் தனியார் கல்லூரியில் பட்டப்படிப்பு படித்து வந்த மாணவிகள் 2பேர் கடந்த சில வருடங்களாக நல்ல தோழிகளாக இருந்து வந்தனர்.

குறிப்பாக இந்த தோழிகள் 2வரும் ஆண்களுடன் அதிகம் பழக்கம் வைத்துக் கொள்வதில்லை. பதிலாகப் பாடம் படிப்பதில், அதிக ஆர்வம் காட்டி வந்துள்ளனர். இதனால், இவர்களின் பெற்றோர்கள் மாணவிகளின் நட்பைப் பார்த்து பெருமை கொண்டிருந்தனர். இப்படி நாட்கள் சென்றபோது தோழிகள் மீது பெற்றோர்களுக்குச் சந்தேகம் ஏற்பட்டுள்ளது.

பெற்றோர்கள் விசாரித்தபோது, இருவரும் காதலிப்பதாகவும், திருமணம் செய்து வைக்கும்படியும் கோரிக்கை வைத்துள்ளனர். இந்த விஷயத்தை ஏற்றுக்கொள்ள முடியாத பெற்றோர் அதிர்ச்சியில், அருகே இருந்த காவல் நிலையம் சென்று புகார் அளித்தனர்.

எனினும், காவல்துறை அதிகாரிகள் இருவீட்டாரிடமும், பெண்கள் இருவரும் காதலிப்பது தவறில்லை என்றும் இதைச் சட்டம் ஒருபோதும் குற்றமாகப் பார்க்காது என்றும் எடுத்துக் கூறியுள்ளனர். அதே வேலையில், தோழிகள் இருவரும் தாங்கள் சேர்ந்து வாழ வேண்டும் எனக் கூறி காவல்துறை அதிகாரிகளிடம் பாதுகாப்புக் கேட்டனர்.

இதையடுத்து சம்பந்தப்பட்ட பெண்களுக்குப் பாதுகாப்பு வழங்கிய காவல்துறையினர் பெற்றோரிடம் ‘பிரச்சனை வேண்டாம், அவர்களுக்கு வயது 20 ஆகிறது, அவர்களால் சுயமாக முடிவெடுக்க முடியும்’ எனக் கூறி அவர்கள் வீட்டுக்கு அனுப்பி வைத்தனர்.

இப்போது காதலர்கள் இருவரும், அதே மாவட்டத்தில் தனியாக ஒரு வீடு எடுத்து, இணைந்து வாழத் தொடங் விட்டனர்.

அடுத்த செய்தி