ஆப்நகரம்

லாந்தர் விளக்கா? எல்.இ.டி பல்பா? தேர்தல் பிரச்சாரத்தில் செம பஞ்ச் பேசிய பிரதமர் மோடி!

தேர்தல் பிரச்சாரத்தின் போது பிஹார் மக்களின் வாழ்வில் ஒளியூட்ட பாஜக எடுக்கப் போகும் நடவடிக்கைகள் குறித்து பிரதமர் மோடி பேசியுள்ளார்.

Samayam Tamil 1 Nov 2020, 4:13 pm
பிஹார் மாநிலத்தில் முதல்கட்ட சட்டமன்ற தேர்தல் நிறைவு பெற்றுள்ளது. அடுத்ததாக நவம்பர் 3 மற்றும் 7 ஆகிய தேதிகளில் இரண்டாவது மற்றும் மூன்றாம் கட்ட தேர்தல்கள் நடைபெறுகின்றன. இதையொட்டி அரசியல் கட்சிகள் தீவிர பிரச்சாரம் மேற்கொண்டு வருகின்றன. இந்த தேர்தலில் ஆளும் ஐக்கிய ஜனதா தளத்துடன் இணைந்து பாஜக போட்டியிடுகிறது. கடந்த சட்டமன்ற தேர்தல் மெகா கூட்டணியில் இணைந்து ஐக்கிய ஜனதா தளம் போட்டியிட்டது குறிப்பிடத்தக்கது. அதன்பிறகு 2017ல் கூட்டணியில் பிளவு ஏற்பட்டது. இந்நிலையில் பிஹார் மாநிலத்தின் பல்வேறு பிரச்சார கூட்டங்களில் பிரதமர் மோடி இன்று கலந்து கொண்டார்.
Samayam Tamil PM Modi


அம்மாநிலத்தின் மொதிஹரியில் நடந்த தேர்தல் பிரச்சாரத்தில் கலந்து கொண்டு பேசிய மோடி, ஏழை மக்கள் மீது சிறிதும் அக்கறை இல்லாதவர்கள் ராஷ்டிரிய ஜனதா கட்சியினர். பிஹார் மாநிலத்தைப் பொறுத்தவரை தொழிற்சாலைகளும், சர்க்கரை மில்களும் தான் முதுகெலும்பு போன்றவை.

ராஷ்டிரிய ஜனதா தளம் ஆட்சிக்கு வந்தால் இவை அனைத்தும் மூடப்படும் நிலை உண்டாகும். நக்சல்களும், நாட்டை துண்டாட நினைப்பவர்களும் ஒன்று சேர்ந்து கொள்வர். அதன்பிறகு பிஹார் மிக மோசமான மாநிலமான மாறிவிடும். வளர்ச்சிப் பாதையில் இருந்து விலகிச் செல்லும்.

என்ன நடந்தாலும் அவர்தான் முதல்வர்: பாஜக அதிரடி அறிவிப்பு!

அவர்கள் லாந்தர் விளக்கு காலத்திற்கு உங்களைக் கொண்டு சென்றுவிடுவார்கள். ஆனால் நாங்கள் உங்களின் ஒவ்வொரு வீடுகளிலும் எல்.இ.டி பல்புகளால் ஒளிரச் செய்ய விரும்புகிறோம். மத்திய அரசு கொண்டு வந்துள்ள ஆத்ம நிர்பார் பாரத் அபியான் திட்டத்தின் மூலம் பிஹார் மக்கள் ஏராளமான பயன்களை அடைந்துள்ளனர் என்று கூறினார்.

எங்களின் தேசிய ஜனநாயகக் கூட்டணி ஆட்சிக்கு வந்தால் வளர்ச்சி ஒன்றையே குறிக்கோளாகக் கொண்டு செயல்படுவோம். எதிர்க்கட்சிகளின் இரண்டு இளவரசர்களும் தொகுதிகளைப் பங்கிட்டு கொள்வதில் தான் மும்முரம் காட்டுகின்றனர் என்று மோடி குற்றம்சாட்டினார்.

அடுத்த செய்தி