ஆப்நகரம்

மீண்டும் பத்திரிகையாளர் மீது துப்பாக்கிச்சூடு; ஆபத்தான நிலையில் சிகிச்சை!

உள்ளூர் பத்திரிகையாளர் மீது மர்ம நபர்கள் துப்பாக்கிச்சூடு நடத்திய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

TNN 7 Sep 2017, 6:35 pm
பாட்னா: உள்ளூர் பத்திரிகையாளர் மீது மர்ம நபர்கள் துப்பாக்கிச்சூடு நடத்திய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
Samayam Tamil local journalist pankaj mishra shot by 2 bike borne persons
மீண்டும் பத்திரிகையாளர் மீது துப்பாக்கிச்சூடு; ஆபத்தான நிலையில் சிகிச்சை!


பீகார் மாநிலம் அர்வால் பகுதியில் பத்திரிகையாளரான பங்கஜ் மிஸ்ரா சென்று கொண்டிருந்தார். அவரது கையில் ரூ.1 லட்சம் இருந்தது.

இந்நிலையில் இருசக்கர வாகனத்தில் மர்மநபர்கள், பங்கஜ் மிஸ்ராவை துப்பாக்கியால் சுட்டனர். பின்னர் அவரிடமிருந்த பணத்தை பறித்துக் கொண்டு தப்பிச் சென்றனர்.

இதைக் கண்ட அப்பகுதி மக்கள் உடனடியாக பங்கஜ் மிஸ்ராவை மீட்டு, மருத்துவமனையில் அனுமதித்தனர். இருப்பினும் பங்கஜ் ஆபத்தான நிலையில் இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

இதற்கிடையில் சம்பவம் குறித்து தகவலறிந்த போலீசார், உடனடியான தீவிர விசாரணை மேற்கொண்டனர். இதில் குற்றவாளிகளில் ஒருவரைக் கைது செய்தனர்.

இந்த சம்பவம் சொந்த பகை காரணமாக நிகழ்ந்துள்ளதாக அர்வால் எஸ்.பி திலிப் குமார் தெரிவித்துள்ளார். பங்கஜ் மிஸ்ரா ராஷ்டிரிய சஹாரா செய்தித்தாளில் பணியாற்றி வருகிறார்.

Local journalist Pankaj Mishra working for Rashtriya Sahara newspaper shot by 2 bike-borne persons in Bihar's Arwal; condition is critical. pic.twitter.com/Q2jrvZEgwm— ANI (@ANI) September 7, 2017 இரண்டு நாட்களுக்கு முன்பு, கர்நாடகாவில் மூத்த பத்திரிகையாளர் கௌரி லங்கேஷ் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவத்தின் பாதிப்பு அடங்குவதற்குள், மீண்டும் ஒரு சம்பவம் அரங்கேறியுள்ளது.

Local journalist Pankaj Mishra working for Rashtriya Sahara newspaper shot by 2 bike-borne persons in Bihar's Arwal; condition is critical.

அடுத்த செய்தி