ஆப்நகரம்

லாக்டவுன் 4.0 எப்படி இருக்கும்? இந்த கட்டுப்பாடுகள் எல்லாம் படிப்படியாக தளர்த்தப்படுகிறதாம்!

நாடு முழுவதும் அமலுக்கு வரவுள்ள நான்காம் கட்ட ஊரடங்கில் என்னென்ன சேவைகள் கிடைக்கும் என்பது பற்றி இங்கே விரிவாக இங்கே காணலாம்.

Samayam Tamil 14 May 2020, 3:32 pm
கொரோனா வைரஸ் தொற்றை கட்டுப்படுத்தும் வகையில் பலகட்டங்களாக ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில் நான்காம் கட்ட ஊரடங்கு குறித்த அறிவிப்பு விரைவில் வெளியாகவுள்ளது. அதில் பொருளாதார ஊக்குவிப்பு நடவடிக்கைகளுக்கு முக்கியத்துவம் அளிக்கும் வகையில் மேலும் சில கட்டுப்பாடுகள் தளர்த்தப்படும். குறிப்பாக உற்பத்தி சார்ந்த துறைகள் மற்றும் குறிப்பிட்ட உள்நாட்டு வழித்தடங்களில் விமானப் போக்குவரத்திற்கு அனுமதி ஆகியவை அடங்கும் என்று கூறப்படுகிறது. மேலும் சிவப்பு, பச்சை, ஆரஞ்சு மண்டலங்களாக பிரிக்கப்படுவதற்கான அளவுகோல்களில் எந்தவித பெரிய மாற்றமும் இருக்காது என்று தெரிகிறது.
Samayam Tamil ஊரடங்கு 4.0


அதாவது கொரோனா பாதிப்பிற்கு ஏற்ப மாவட்டங்களுக்கு வண்ணப் பெயர் சூட்டுவது, தனிமைப்படுத்தும் மண்டலங்களாக அறிவிப்பது ஆகியவை தொடர்ந்து நீடிக்கும். ஆனால் சிவப்பு மற்றும் ஆரஞ்சு மண்டலங்களில் தனிமைப்படுத்தப்பட்ட பகுதிகள் அல்லாத இடங்களில் பொருளாதார நடவடிக்கைகள், பணியிடங்கள், வியாபார செயல்பாடுகள், தொழிற்சாலைகள் மற்றும் உற்பத்தி பிரிவுகள் ஆகியவற்றிற்கு குறைந்தபட்ச கட்டுப்பாடுகள் மட்டுமே இருக்கும்.

100% கடனையும் கொடுத்திடுறேன் - அந்த விஷயத்தை மட்டும் முடிச்சி வச்சிருங்க - விஜய் மல்லையா!

சிவப்பு மண்டலங்களில் அத்தியாவசியம் இல்லாத பொருட்கள் விற்பனைக்கும் ஆன்லைன் வர்த்தகத்தில் அனுமதி அளிக்கப்படக்கூடும். குறிப்பாக ஊரடங்கு நீட்டிப்பிற்கான மத்திய உள்துறை அமைச்சகத்தின் புதிய வழிகாட்டுதல்களில் சிவப்பு/ ஆரஞ்சு மண்டலங்களில் தடை செய்யப்பட்ட செயல்பாடுகளுக்கு கூட அனுமதி அளிக்கப்பட வாய்ப்புள்ளதாக தெரிகிறது.

இதுபற்றி மூத்த அதிகாரி ஒருவர் கூறுகையில், சிவப்பு அல்லது மஞ்சள் மண்டலங்களில் தனிமைப்படுத்தப்பட்ட பகுதிகளை தவிர்த்து மற்றவற்றில் அனைத்துவிதமான நடவடிக்கைகளுக்கும் அனுமதி அளிக்கப்படும் என்றார்.

இதில் பெரிதும் ஆறுதல் அளிக்கக்கூடிய விஷயம் என்னவென்றால் வரும் திங்கட்கிழமை முதல் குறிப்பிட்ட வழித்தடங்களில் உள்நாட்டு விமானப் போக்குவரத்து தொடங்கப்படுவதாக கூறப்படும் தகவல் தான்.

அதிலும் டெல்லி - மும்பை வழித்தடத்தில் விமானங்கள் இயங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறப்படுகிறது. ஆனால் சர்வதேச விமானப் போக்குவரத்து பற்றி தற்போது வரை அரசு தரப்பில் எந்தவித முடிவும் எடுக்கப்படவில்லை.

சிவப்பு மண்டலங்களில் பொதுப் போக்குவரத்து முழுவதுமாக தடை செய்யப்பட்டிருப்பதால் 33 சதவீத ஊழியர்களுடன் இயங்கும் தனியார் நிறுவனங்களும், அரசு ஊழியர்களும் சிரமத்தில் ஆழ்ந்துள்ளனர்.

பதுங்குனது பாயறத்துக்கா?- தேசிய நெடுஞ்சாலையில் மெர்சல் காட்டிய சிறுத்தை புலி!

இங்கு போக்குவரத்து சேவையை படிப்படியாக செயல்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என்று எதிர்பார்க்கலாம். இப்பகுதியில் குறைந்த எண்ணிக்கையில் மெட்ரோ ரயில்களும் இயக்க அனுமதி அளிக்கப்படக்கூடும்.

டெல்லி மெட்ரோ சேவையை பாதுகாப்பாக தொடங்குவதற்கு மத்திய தொழில் பாதுகாப்பு படையினர் உரிய திட்டமிடுதலை மேற்கொண்டுள்ளனர். இதில் நுழைவாயிலில் பயணிகள் உடல் வெப்பநிலை பரிசோதனை, ஸ்கேனிங்கில் எச்சரிக்கை விடுக்கும் நபர்களை வெளியேற்றுதல் உள்ளிட்ட நடவடிக்கைகள் அடங்கும்.

ஊரடங்கு 4.0ல் சிவப்பு மண்டலங்களில் மட்டும் முடி திருத்தும் கடைகளுக்கு தொடர்ந்து தடை நீடிக்கும் என்று தகவல்கள் கூறுகின்றன.

அடுத்த செய்தி