ஆப்நகரம்

எம்.பிக்களுக்கு கொரோனா பரிசோதனை கட்டாயம்: சபாநாயகர் உறுதி!

நாடாளுமன்ற மழைக்கால கூட்டத் தொடர் நடைபெறவுள்ள நிலையில் அதற்கான முன்னெச்சரிக்கை ஏற்பாடுகள் குறித்து விவாதிக்கப்பட்டுள்ளன.

Samayam Tamil 29 Aug 2020, 9:04 am
நாடாளுமன்ற மழைகால கூட்டத் தொடரில் அமர்வு தொடங்குவதற்கு 72 மணி நேரத்துக்கு முன்னர் உறுப்பினர்களுக்கு கொரோனா பரிசோதனை செய்ய வேண்டும் என மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா தெரிவித்துள்ளார்.
Samayam Tamil parliament


நாடாளுமன்ற மழைக்கால கூட்டத் தொடர் நடைபெறவுள்ள நிலையில் அது தொடர்பான ஆலோசனைக் கூட்டம் நேற்று நடைபெற்றது.

இதில் மத்திய சுகாதார அமைச்சக அதிகாரிகள், இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில், பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பினர், எய்ம்ஸ் மருத்துவமனை மற்றும் தில்லி அரசாங்கத்தின் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

தமிழ்நாட்டில் அடுத்த கட்ட தளர்வு: எதற்கெல்லாம் அனுமதி?

இந்தக் கூட்டத்தில் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ள முடிவு செய்யப்பட்டது. “நாடாளுமன்ற மழைக்கால கூட்டத் தொடர் தொடங்கப்படுவதற்கு முன் நாடாளுமன்ற வளாகத்தில் கொரோனா பரிசோதனை நடத்துவதற்கான ஏற்பாடுகள் செய்யப்படும்” என சபாநாயகர் ஓம் பிர்லா கூறியுள்ளார். மேலும் அவர் 72 மணி நேரத்துக்கு முன்னர் பரிசோதனை செய்யப்பட வேண்டும் என்றார்.

அமர்வில் கலந்து கொள்ளும் அதிகாரிகள் மற்றும் ஊடகவியலாளர்களும் கொரோனா சோதனைகளுக்கு உட்படுத்தபடுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மழைக்கால கூட்டத்தொடர் செப்டம்பர் 14 ஆம் தேதி தொடங்கி அக்டோபர் 1 வரை நடைபெறவுள்ளது. மாநிலங்களவை மற்றும் மக்களவை ஆகிய இரு அவைகளும் வெவ்வேறு நேரங்களில் நடைபெறும். காலை 9 மணிக்கு மாநிலங்களவை தொடங்கும், பிற்பகல் 3 மணிக்கு மக்களவை தொடங்கும்.

எப்படி உருவானது வசந்த் அண்ட் கோ? வசந்தகுமார் கடந்த வந்த பாதை!

ஒரு மூத்த அதிகாரி மேலும் கூறுகையில், நிகழ்ச்சி நிரலுக்கு கூடுதல் நேரம் தேவைப்பட்டால் வார இறுதிகளில் கூட அவை நடத்தப்படும் என்றார்.

அடுத்த செய்தி