ஆப்நகரம்

காதலியின் பற்களை பிடுங்கிய காதலன்: சந்தேகம் அதிகரித்ததால் வெறிச்செயல்

மற்ற ஆண்கள் கண்களுக்கு அசிங்கமாக தெரிய, காதலியின் இரண்டு பற்களை பிடுங்கிய ஆணின் செயல் அதிர்ச்சியை அளித்துள்ளது.

Samayam Tamil 5 Aug 2018, 3:38 pm
மற்ற ஆண்கள் கண்களுக்கு அசிங்கமாக தெரிய, காதலியின் இரண்டு பற்களை பிடுங்கிய ஆணின் செயல் அதிர்ச்சியை அளித்துள்ளது.
Samayam Tamil cover-pic


குஜராத் மாநிலத்தின் அஹமதாபாத் நகரில், கீதாபென் என்ற பெண் 57 வயது ஆணுடன் திருமணமாகமல் சேர்ந்து வாழந்து வந்தார். சம்பவம் நடந்த அன்று, துதேஷ்வர் நகரில் வாடிக்கையாளர் ஒருவரை ஏற்றிக்கொண்டு அவர்கள் இருவரும் சேர்ந்து ஆட்டோவின் முன் சீட்டில் சென்றுக்கொண்டிருந்தனர்.

அப்போது இருவருக்குமிடையில் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. அப்போது ஆத்திரமடைந்த அந்த ஆணின் நடவடிக்கையை பார்த்து, பயந்து போன கீதாபென், உடனே வெளியே குதித்துவிட்டார்.

இதை பார்த்த ஆட்டோவில் பயணம் செய்த வாடிக்கையாளர் ஒருவர், ’181 அபயம்’ என்கிற பெண் பாதுகாப்பு எண்ணுக்கு அழைத்து தகவல் கொடுத்தார். கீதாப்பென்னை மீட்ட அவர்கள் அவருக்கு பற்கள் பிடுங்கப்பட்டிருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தனர்.

இதுதொடர்பாக காவல் நிலையத்தில் புகார் அளித்த அவர், தொடர்ந்து தனது இணையால் கொடுமைப்படுத்தப்பட்டு வந்ததாக அந்த புகாரில் கீதாபென் குறிப்பிட்டுள்ளார்.

மேலும் என் மேல் உள்ள சந்தேக புத்தியால் பற்களை பிடுங்கிவிட்டதாகவும், அதனால் பல நாட்கள் வேலைக்கு செல்லாமலும் யாருடனும் பேசமால் இருந்து வந்தாக அந்த பெண் தெரிவித்தார்.

எனினும் தனது இணை மேல் பாதிக்கப்பட்ட கீதா பென் எந்த புகாரும் அளிக்கவில்லை. இதனால் காவல்துறை அலுவர்கள் இந்த சம்பவம் தொடர்பான வழக்கை பதிவு செய்யவில்லை.

அடுத்த செய்தி