ஆப்நகரம்

மலிவு விலை கோவிட்-19 டெஸ்ட் கிட்; அதுவும் இன்றைக்கே - அசத்தும் ஐஐடி!

கொரோனா பரிசோதனைகள் செய்வதற்கு மிகக் குறைந்த விலையில் கருவி ஒன்றை ஐஐடி டெல்லி உருவாக்கியுள்ளது.

Samayam Tamil 15 Jul 2020, 9:11 am
இந்தியாவில் கொரோனா வைரஸிற்கு “கோவாக்சின்” என்ற தடுப்பு மருந்து கண்டறியப்பட்டு மனிதர்கள் மீது பரிசோதனை செய்யும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர். இதற்கிடையில் கொரோனா பாதிப்பைக் கண்டறியும் மலிவு விலை பரிசோதனைக் கருவியை தயாரிக்கும் முயற்சியில் ஐஐடி டெல்லி ஈடுபட்டது. இது வெற்றிகரமாக கண்டுபிடிக்கப்பட்ட நிலையில் இன்று முதல் வர்த்தக ரீதியாக அறிமுகம் செய்து வைக்கப்படும் என்று ஐஐடி இயக்குநர் தெரிவித்துள்ளார். இதற்கான விலை ரூ.500 என ஐஐடி நிர்ணயம் செய்துள்ளது.
Samayam Tamil Covid-19 Test Kit


இந்த கருவியை விற்பனைக்கு கொண்டு வரவுள்ள நியூடெக் மெடிக்கல் டிவைசஸ் நிறுவனம் இன்னும் விலையை அறிவிக்கவில்லை. அதேசமயம் ‘கோரோசூர்’(Corosure) என்று பெயரிட்டுள்ளது.

ஹேப்பி நியூஸ் சொன்ன கொரோனா; அதுவும் இந்தளவிற்கு - முழு விவரம் இதோ!

இந்த கருவியை மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சர் ரமேஷ் பொக்ரியால் மற்றும் இணையமைச்சர் சஞ்சய் தோத்ரே ஆகியோர் அறிமுகம் செய்து வைக்கின்றனர்.

இதுபற்றி ஐஐடி டெல்லி இயக்குநர் வி.ராம்கோபால் ராவ் கூறுகையில், மலிவு விலை கருவியால் பரிசோதனைகளின் எண்ணிக்கை மற்றும் அதற்கான செலவு ஆகியவற்றின் அடிப்படையில் இந்தியாவில் மிகப்பெரிய மாற்றம் வரும்.

இந்த கருவிக்கு ஐ.சி.எம்.ஆர் மற்றும் டி.சி.ஜி.ஐ ஆகியவை ஒப்புதல் தெரிவித்துள்ளன. ஐஐடி டெல்லியின் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி நியூடெக் மெடிக்கல் டிவைசஸ் கருவிகளைக் கொண்டு மாதத்திற்கு குறைந்த கட்டணத்தில் 20 லட்சம் கொரோனா பரிசோதனைகளை செய்ய முடியும்.

கொரோனாவால் இறந்தவர்களுக்கு இறுதி சடங்கு செய்ய ரூ.15 ஆயிரம்..! - அரசு அறிவிப்பு

மலிவு விலையில் மிகவும் துல்லியமான முடிவுகளைப் பெற முடியும் என்றார். இந்தியாவில் நேற்று 28,498 பேருக்கு புதிதாக வைரஸ் தொற்று ஏற்பட்ட நிலையில் மொத்த எண்ணிக்கை 9 லட்சத்தை தாண்டியுள்ளது. 8 லட்சத்தை தாண்டிய அடுத்த 3 நாட்களில் 9 லட்சத்தை தாண்டி இருக்கிறது.

அடுத்த செய்தி