ஆப்நகரம்

வங்கக் கடலில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி... இந்த மாநிலங்களுக்கு ரெட் அலர்ட்!!

வங்கக் கடலின் வடக்குப் பகுதியில் நாளை (ஆகஸ்ட் 4) புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக உள்ளதையடுத்து குஜராத், மகாராஷ்டிரா ஆகிய மாநிலங்களுக்கு ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

Samayam Tamil 3 Aug 2020, 5:16 pm
வடக்கு வங்கக்கடல் பகுதியில் நாளை (ஆகஸ்ட் 4) புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக அதிகம் வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதன் காரணமாக, தென்மேற்கு பருவமழை மேலும் வலுவடையும் என்றும், 5 நாட்கள் கனமழை பெய்யும் எனவும் வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.
Samayam Tamil bay of bengal


அத்துடன் கேரளா, கர்நாடகா ஆகிய மாநிலங்களுக்கு ஆரஞ்சு அலர்ட்டும், குஜராத், மகாராஷ்டிரா ஆகிய மாநிலங்களுக்கு ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது.

கனமழை, வெள்ளம் காரணமாக, அஸ்ஸாம் மாநிலத்தில் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளன நிலையில், தற்போது மகாராஷ்டிரா, குஜராத் மாநிலங்களுக்கு ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது இந்த மாநிலங்களைச் சேர்ந்த மக்களை அச்சத்தில் ஆழ்த்தியுள்ளது.

வெள்ளத்தில் மிதக்கும் மாநிலம்; உயரும் பலி எண்ணிக்கை - தத்தளிக்கும் மக்கள்!

நாட்டிலேயே கொரோனா நோற்றுத்தொற்றுக்கு ஆளாவோரின் எண்ணிக்கையில், மகாராஷ்டிர மாநிலம் முதலிடத்தில் உள்ளதென்பதும், தற்போது அங்கு தென்மேற்கு பருவமழை தீவிரமடையும் என்று வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளதும் குறிப்பிடத்தக்கது.

அடுத்த செய்தி