ஆப்நகரம்

சிவாஜி சிலை அமைக்க ரூ. 2,500 கோடி ஒப்பந்தம்

ரூ. 2,500 கோடி செலவில் உலகின் மிக உயரமான சிவாஜி சிலை அமைக்கும் ஒப்பந்தத்தை பிரபல லார்சன் & டூப்ரோ நிறுவனம் கைப்பற்றியுள்ளது.

Samayam Tamil 2 Mar 2018, 2:55 pm
ரூ. 2,500 கோடி செலவில் உலகின் மிக உயரமான சிவாஜி சிலை அமைக்கும் ஒப்பந்தத்தை பிரபல லார்சன் & டூப்ரோ நிறுவனம் கைப்பற்றியுள்ளது.
Samayam Tamil lt bags rs 2500 crore shivaji statue contract
சிவாஜி சிலை அமைக்க ரூ. 2,500 கோடி ஒப்பந்தம்


மகாராஷ்டிர மாநிலம் மும்பை கடற்கரையில் மராட்டிய மன்னர் சத்ரபதி சிவாஜியின் சிலை அமைய உள்ளது. 210 மீட்டர் உயரம் கொண்ட இந்த சிலை உலகிலேயே மிக உயர்ந்த சிலையாக உருவாக உள்ளது.

கடந்த ஆண்டு இச்சிலை அமைக்கப்பதற்காக மகாராஷ்டிர முதல்வர் தேவேந்திர பட்னவிஸ் ரூ.3,600 கோடி நிதி ஒதுக்கினார். இதனையடுத்து, நகர்புற மேம்பாட்டுத்துறையின் ஒப்புதல் பெறப்பட்டது.

இந்நிலையில், இச்சிலை அமைக்கும் பணிக்கான மூன்று நிறுவனங்களிடமிருந்து டென்டர்கள் பெறப்பட்டன. ரிலையன்ஸ் (Reliance Infrastructure), அஃப்கான்ஸ் (Afcons Infrastructure) மற்றும் லார்சன் & டூப்ரோ (L&T) ஆகிய மூன்று நிறுவனங்கள் சமர்ப்பித்தன. இதில், ரூ.2,500க்கு லார்சன் & டூப்ரோ ஒப்பந்தத்தைத் தன்வசப்படுத்தியுள்ளது.

சத்ரபதி சிவாஜி வாள் ஏந்திய படி குதிரையில் அமர்ந்திருப்பது போல அமைக்கப்பட உள்ளது. சிவாஜி ஏந்தியிருக்கும் வாளின் முனை 210 மீட்டர் உயர்த்தில் இருக்கும். இதனால், இதுவே உலகின் உயரமான சிலையாக அமையும் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்தச் சிலை அமைக்கும் திட்டத்தை ரத்துசெய்ய பொதுநல வழக்கு ஒன்று மும்பை உயர்நீதிமன்றத்தில் கடந்த ஜனவரி மாதம் தொடரப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.

அடுத்த செய்தி