ஆப்நகரம்

உத்தர பிரதேசத்தில் ரூ.10க்கு தக்காளி விற்பனை!

தக்காளி விலை உயர்வால், மக்கள் கடுமையாக பாதிக்கப்படும் நிலையில், உத்தர பிரதேசத்தில் கிலோ, 10 ரூபாய்க்கு, காங்கிரஸ் தொண்டர்கள் தக்காளி விற்றதால் பரபரப்பு ஏற்பட்டது.

TOI Contributor 5 Aug 2017, 6:57 am
லக்னோ: தக்காளி விலை உயர்வால், மக்கள் கடுமையாக பாதிக்கப்படும் நிலையில், உத்தர பிரதேசத்தில் கிலோ, 10 ரூபாய்க்கு, காங்கிரஸ் தொண்டர்கள் தக்காளி விற்றதால் பரபரப்பு ஏற்பட்டது.
Samayam Tamil lucknow congress sells tomatoes for rs 10 a kg in protest against price rise
உத்தர பிரதேசத்தில் ரூ.10க்கு தக்காளி விற்பனை!


நாடு முழுதும், வருடத்துக்கு 1.8 கோடி டன் தக்காளி உற்பத்தி செய்யப்படுகிறது. தக்காளி உற்பத்தியாகும் மாநிலங்களான, கர்நாடகா, ஆந்திரா, தெலுங்கானா, மத்திய பிரதேசம், மேற்கு வங்கம், ஒடிசா ஆகிய மாநிலத்தில் பல்வேறு காரணத்தால் உற்பத்தி கடுமையாக பாதிக்கப்பட்டது. இதனால், தக்காளி விலை, கிலோ, ரு. 100ஐ தாண்டியது.

இதற்கு கண்டனம் தெரிவிக்கும் வகையில், பா.ஜ., ஆட்சி செய்யும் உத்தர பிரதேசத்தின் லக்னோவில், சட்டசபை வளாகத்துக்கு வெளியே காங்கிரஸ் தொண்டர்கள், தக்காளி கிலோ, ரூ.10க்கு விற்பனை செய்தனர். இதனால், அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

அடுத்த செய்தி