ஆப்நகரம்

2019 Lok sabha Elections: நாடாளுமன்ற தேர்தலில் தோனி, கம்பீர், மாதுரி தீட்சித் : பாஜக.,வின் மாஸ் திட்டம்

2019 நாடாளுமன்ற தேர்தலில் பாஜக சார்பில் பிரபலங்களை கலமிறக்கி வெற்றியை ருசிக்க திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.

Samayam Tamil 6 Dec 2018, 5:13 pm
மும்பை :2019 நாடாளுமன்ற தேர்தலில் பாஜக சார்பில் பிரபலங்களை கலமிறக்கி வெற்றியை ருசிக்க திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.
Samayam Tamil madhuri-dixit


வருகிற நாடாளுமன்ற தேர்தலில் பாஜக கட்சியை வலுப்படுத்த பிரபலங்களை சந்தித்து ஆதரவு கோரும் நிகழ்வை முன்னெடுத்து வருகின்றது.

அந்த வகையில், ‘ஏக் தோ தீன்’ பாடல் மூலம் நாடு முழுவதும் மிகவும் பரிட்சயமானவர் பாலிவுட் நடிகை மாதுரி தீட்சித். இவரை கடந்த ஜூன் மாதம் மும்பையில் பாஜக தலைவர் அமித் ஷா சந்தித்து ஆதரவு கோரினார்.

இந்நிலையில் வரும் நாடாளுமன்ற தேர்தலில் புனே தொகுதியில் மாதுரி தீட்சித் பாஜக சார்பில் களமிறக்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியிருக்கிறது.


தோனி, கம்பீரை 2019 நாடாளுமன்ற தேர்தலில் பாஜக களமிறக்க திட்டம்! - எந்த தொகுதி தெரியுமா?

பாஜக.,வில் தோனி, கம்பீர்:
இந்நிலையில் தல தோனி, கம்பீர் உள்ளிட்ட பிரபல கிர்க்கெட் வீரர்களையும் பாஜக சார்பில் களமிறக்கி வெற்றியை ருசிக்க பாஜக திட்டமிட்டுள்ளது என தகவல்கள் வெளியாகியுள்ளது.

அடுத்த செய்தி