ஆப்நகரம்

ஜூன் 15 வரை ஊரடங்கு நீட்டிப்பு... அரசு அதிரடி!

மத்தியப் பிரதேச முதல்வர் சிவ்ராஜ் சவுஹான் ஊரடங்கை ஜூன் 15ஆம் தேதி வரை நீட்டித்து உத்தரவு...

Samayam Tamil 30 May 2020, 7:11 pm
நாடு முழுவதும் ஊரடங்கு நாளையுடன் நிறைவடைய உள்ள நிலையில் மத்தியப் பிரதேச அரசு ஜூன் 15ஆம் தேதி வரை ஊரடங்கை நீட்டித்து உத்தரவிட்டுள்ளது.
Samayam Tamil ஜூன் 15 வரை ஊரடங்கு நீட்டிப்பு... அரசு அதிரடி!
ஜூன் 15 வரை ஊரடங்கு நீட்டிப்பு... அரசு அதிரடி!


கொரோனா வைரஸ் தொற்றைக் கட்டுப்படுத்த நாடு முழுவதும் 4வது முறையாக ஊரடங்கு நீட்டிக்கப்பட்டு, அது நாளையுடன் நிறைவடைகிறது. எனினும் இந்த காலத்தில் கொரோனாவின் தாக்கம் அதிகளவில் காணப்படுகிறது.

குறிப்பாக நாட்டில் மகாராஷ்டிராவில் கொரோனாவின் தாக்கம் மிகவும் அதிகமாகக் காணப்படுகிறது. அதே வேளையில் பெரும்பாலான மாநிலங்களின் தலைநகரங்களில் கொரோனா கடுமையாகப் பரவியுள்ளது.

கொரோனாவை கட்டுப்படுத்துவதில் மத்திய மாநில அரசுகள் கடுமையாகப் போராடி வருகிறது. இந்த சூழலில் மத்தியப் பிரதேச அரசு கொரோனா காரணமாக ஊரடங்கை ஜூன் 15ஆம் தேதி வரை நீட்டித்துள்ளது.

மோடி சர்க்கார் 2.0: ஆடிய ஆட்டம் என்ன?

மத்தியப் பிரதேசத்தில் வெள்ளிக்கிழமை நிலவரப்படி 7 ஆயிரத்து 645 பேருக்கு வைரஸ் தொற்று பாதித்திருந்தது கண்டறியப்பட்டது. ஊரடங்கு நீட்டித்தது குறித்து மத்தியப் பிரதேச முதல்வர் சிவ்ராஜ் சிங் சவுஹான் கூறுகையில், "கொரோனா வைரஸ் தாக்கத்தைக் கட்டுப்படுத்துவதே அரசின் முதன்மை கடமை இந்த நேரத்தில், பொருளாதாரம் தொடர்பான நடவடிக்கைகளுக்கு அனுமதி வழங்க முடியாது" என்றார்.

சமீப நாட்களாக போபாலில் கொரோனாவின் தாக்கம் அதிகரித்து வருகிறதாக மாநில அரசு கவலை தெரிவிக்கிறது. வெள்ளிக்கிழமை நிலவரப்படி போபாலில் புதிதாக 15 பேருக்கு கொரோனா ஏற்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

அடுத்த செய்தி