ஆப்நகரம்

கொரோனா பேராபத்து; இப்படியொரு உதவிகேட்ட மகாராஷ்டிரா - கைகொடுக்குமா கேரளா?

நாளுக்கு நாள் கொரோனா பாதிப்பின் நிலை மிக மோசமடைந்து கொண்டிருப்பதால் கேரள அரசிடம் மகாராஷ்டிர மாநில அரசு முக்கிய கோரிக்கை ஒன்றை முன்வைத்துள்ளது.

Samayam Tamil 25 May 2020, 2:15 pm
இந்தியாவில் கொரோனா வைரஸ் பாதிப்பு 1,39,237ஆக அதிகரித்துள்ளது. நாட்டிலேயே அதிகபட்சமாக மகாராஷ்டிர மாநிலத்தில் 50 ஆயிரம் பேருக்கும் மேல் கோவிட்-19 தொற்று ஏற்பட்டுள்ளது. 33,996 பேர் தொடர் சிகிச்சையில் இருக்கின்றனர். இங்கு அதிகபட்சமாக மும்பையில் 30,542 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இங்குள்ள மக்கள் நெருக்கடி நிறைந்த தாராவி பகுதியில் கொரோனா தொற்று வேகமாக பரவி வருவது அதிர்ச்சியை ஏற்படுத்துகிறது. இம்மாநிலத்தில் நாளுக்கு நாள் நிலைமை மோசமடைந்து செல்வதால் தனியார் மருத்துவமனை மருத்துவர்களும் களத்தில் இறங்கி பணியாற்றி வருகின்றனர்.
Samayam Tamil மகாராஷ்டிரா உதவி


இருப்பினும் நிலைமையை சமாளிக்க முடியாமல் மாநில அரசு திணறி வருகிறது. மும்பை மற்றும் புனே ஆகிய பகுதிகளை சமாளிக்க மட்டும் தனிக் குழு தேவைப்படுவதாக கூறப்படுகிறது. இதையொட்டி கேரளாவிடம் இருந்து நிபுணத்துவம் வாய்ந்த 50 மருத்துவர்கள் மற்றும் 100 செவிலியர்களை உதவிக்கு கேட்டுள்ளது.

ஊரடங்கில் முதல் விமான சேவை; தனி ஆளாக பயணித்த சிறுவன் - ஏன் தெரியுமா?

ஏனெனில் தொடக்கம் முதலே கொரோனாவிற்கு எதிராக கேரள அரசு மிகவும் சிறப்பாக செயலாற்றிக் கொண்டிருக்கிறது. மருத்துவர்கள் மற்றும் சுகாதாரத்துறை ஊழியர்களின் சீரிய செயல்பாட்டால் குணமடைந்து வீடு திரும்புபவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.

வைரஸ் தொற்று மேலும் பரவாமல் தடுக்கவும் பல்வேறு யுக்திகளை வகுத்து செயலாற்றி கொண்டிருக்கிறது. இந்த சூழலில் கேரள அரசிற்கு எழுதியுள்ள கடிதத்தில், மும்பை மாநகராட்சியின் மகாலட்சுமி கோவிட் ஜம்போ சேவைக்கு தற்காலிகமாக மருத்துவ பணியாளர்கள் தேவைப்படுகின்றனர் என்று மகாராஷ்டிர மாநில அரசு வலியுறுத்தியுள்ளது.

குறிப்பாக எம்.பி.பி.எஸ் மருத்துவர்களுக்கு மாதம் ரூ.80,000 சம்பளம் தருகிறோம். எம்.டி, எம்.எஸ் மருத்துவர்களுக்கு மாதம் 2 லட்சம் ரூபாய் சம்பளம் தருகிறோம். செவிலியர்களுக்கு மாதம் ரூ.30,000 சம்பளம் தருகிறோம். அவர்கள் சாப்பிட, தங்குவதற்கு என அனைத்து வசதிகளையும் நாங்களே செய்து தருகிறோம்.

'புலம்பெயர் தொழிலாளர்கள் ஆணையம்' - உ.பியை ஃபாலோ பண்ணுமா மற்ற மாநிலங்கள்?

மேலும் இவர்களுக்கு தேவையான மருந்துகள், பாதுகாப்பு டிரஸ்கள், உபகரணங்கள் போன்றவற்றையும் செய்து தருகிறோம் என்று மகாராஷ்டிர அரசு உத்தரவாதம் அளித்துள்ளது. இதையொட்டி கேரள அரசு விரைவில் உதவிக்கரம் நீட்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

அடுத்த செய்தி