ஆப்நகரம்

கப்பல் கட்டுமான நிறுவனத்தில் ராஜேந்திர சோழனின் திருவுருவப்படம்: மகாராஷ்டிர அரசு கவுரவம்

மும்பையில் உள்ள பிரபல கப்பல் கட்டுமான நிறுவனத்துக்கு தமிழ் பேரரசர் மாமன்னர் ராஜேந்திர சோழனின் திருவுருவப்படத்தை மகராஷ்டிர அரசு அர்ப்பணிக்கவுள்ளது.

TNN 29 Sep 2016, 12:44 pm
மும்பை: மும்பையில் உள்ள பிரபல கப்பல் கட்டுமான நிறுவனத்துக்கு தமிழ் பேரரசர் மாமன்னர் ராஜேந்திர சோழனின் திருவுருவப்படத்தை மகாராஷ்டிர அரசு அர்ப்பணிக்கவுள்ளது.
Samayam Tamil maharashtra govt dedicated tamil emperor cholas portrait to mazgon docks marking his millennium anniversary
கப்பல் கட்டுமான நிறுவனத்தில் ராஜேந்திர சோழனின் திருவுருவப்படம்: மகாராஷ்டிர அரசு கவுரவம்


தமிழகத்தில் சுமார் 1,000 ஆண்டுகளுக்கு முன்னர் ஆட்சிபுரிந்த, வலிமைமிக்க கப்பல் படையைக் கொண்டிருந்த சோழ மன்னரான ராஜேந்திர சோழனின் திருவுருவப் படத்தை இந்தியக் கப்பல் கட்டுமான நிறுவனத்துக்கு அர்ப்பணிக்கும் விழா வரும் இன்று (செப்.29) மும்பையில் உள்ள மஸ்கான் டெக்ஸ் கப்பல் கட்டுமான நிறுவனத்தில் நடைபெறுகிறது.


இதனை ராஜேந்திர சோழன் புத்தாயிரம் கொண்டாட்ட குழுவின் தலைவரும், மாநிலங்களவை முன்னாள் பாஜக உறுப்பினருமான தருண் விஜய் தெரிவித்துள்ளார். இவ்விழாவில் மகாராஷ்டிரா ஆளுநர் வித்யா சாகர ராவ் மற்றும் முதல்வர் தேவேந்திர பட்னாவீஸ் ஆகியோர் ராஜேந்திர சோழ அரசின் திருவுருவப்படத்தை அர்ப்பணிப்பார்கள் எனவும் தருண் விஜய் கூறியுள்ளார்.

ராஜேந்திர சோழன் உலகின் மிகப் பெரிய கடற்படை பேரரசர் ஆவார். இவரது புத்தாயிரம் நினைவு தேசிய ஒருமைப்பாடு மட்டுமின்றி இந்திய பெருங்கடலை சமாதான மண்டலமாக்க ஒரு உத்வேகம் என்று தருண் விஜய் கூறியுள்ளார்.

இதனிடையே, ஒருமைப்பாட்டின் அடையாளமாக தமிழ் பேரரசுக்கு மகாராஷ்டிர அரசு அளித்துள்ள கவுரவத்தை பாராட்டி பாதுகாப்புத் துறை அமைச்சர் மனோகர் பாரிக்கர் வாழ்த்துச் செய்தி அனுப்பியுள்ளார்.


தமிழகத்தைச் சேர்ந்த ராஜராஜ சோழனின் வாரிசான பேரரசர் ராஜேந்திர சோழன் இந்தியக் கடல் பகுதியில் வலிமையான கப்பல் படையை அமைத்து அந்தமான் நிகோபார் தீவுகள், இலங்கை, மாலத்தீவு உள்பட பல்வேறு நாடுகளை வெற்றிகண்ட பெருமைக்குரியவர். இவரது திருவுருவப்படம் மத்திய அரசின் கப்பல் கட்டும் நிறுவனமான மஸ்கான் டாக்ஸ் ஷிப் பில்டர்ஸ் அண்ட் சப்மரைன் பில்டர்ஸ் நிறுவனத்துக்கு அர்ப்பணிக்கப்படவுள்ளது.

Maharashtra Government to dedicate Tamil Emperor Rajendra Chola's portrait to Mazgon Docks marking his millennium anniversary ceremony. This Unique function marks the National Unity.

அடுத்த செய்தி