ஆப்நகரம்

கேரள முதல்வர் பினராயி விஜயனுடன், கமல்ஹாசன் சந்திப்பு!

கேரள முதலமைச்சர் பினராயி விஜயனுடன், மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் இன்று சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினார்.

Samayam Tamil 20 May 2018, 4:34 pm
கேரள முதலமைச்சர் பினராயி விஜயனுடன், மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் இன்று சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினார்.
Samayam Tamil kamal
கேரள முதல்வர் பினராயி விஜயனுடன், கமல்ஹாசன் சந்திப்பு!


தனியார் தொலைக்காட்சி விருது வழங்கும் விழாவில் பங்கேற்பதற்காக இன்று கேரள மாநிலம் கொச்சி சென்ற கமல்ஹாசன், அங்கு கேரள முதல் அமைச்சர் பினராய் விஜயனை சந்தித்து பேசினார்.

அப்போது அவர்கள் அரசியல் பற்றியும், காவிரி பிரச்சினை குறித்தும் பேசினர். மேலும் தமிழகத்திலிருந்து நீட் தேர்வு எழுதுவதற்காக கேரளா சென்ற மாணவ-மாணவிகளுக்கு உதவும் வகையில் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொண்டதற்கு நன்றி தெரிவித்தார்.


நடிகர் கமல் ஹாசன் தனது அரசியல் பயணத்தை தொடங்கப்போவதாக அறிவித்தபோது, அதாவது ஓணம் பண்டிகையின் போது, கேரளா சென்று முதல்வர் பினராயி விஜயனைச் சந்தித்து பேசினார்.

பின்னர் கமல்ஹாசனின் முதல் அரசியல் அறிவிப்பு பொதுக்கூட்டம் மதுரையில் நடைபெற்ற போது பினராயி விஜயன் வீடியோ மூலமாக கமல்ஹாசனுக்கு தனது வாழ்த்துகளை தெரிவித்தார். இந்த நிலையில் இன்று மீண்டும் கமல்ஹாசன், கேரள முதலமைச்சர் பினராயி விஜயனை சந்தித்தது குறிப்பிடத்தக்கது.

அடுத்த செய்தி