ஆப்நகரம்

கேரள மாநிலத்துக்கு ரூ.10 கோடி நிதியுதவி: மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி!

வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட கேரள மாநிலத்துக்கு, ரூ. 10 கோடி நிதியுதவி வழங்குவதாக மேற்கு வங்காள முதல்வர் மம்தா பானர்ஜி அறிவித்துள்ளார்.

Samayam Tamil 19 Aug 2018, 3:54 pm
வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட கேரள மாநிலத்துக்கு, ரூ. 10 கோடி நிதியுதவி வழங்குவதாக மேற்கு வங்காள முதல்வர் மம்தா பானர்ஜி அறிவித்துள்ளார்.
Samayam Tamil XvAx1zFG_400x400
கேரள மாநிலத்துக்கு ரூ.10 கோடி நிதியுதவி: மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி!


கேரள மாநிலத்தில் கடந்த 100 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு அதிகனமழை பெய்து வருகிறது. கனமழையினால் ஏற்பட்ட வெள்ளம் மற்றும் நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தோரின் எண்ணிக்கை 350 ஆக உயர்ந்துள்ளது. வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளில், மத்திய மற்றும் மாநில அரசுகள் இணைந்து மிகப்பெரிய அளவிலான மீட்பு பணியை மேற்கொண்டுள்ளனர். வெள்ளத்தில் சிக்கித்தவித்த லட்சகணக்கான மக்கள் மீட்கப்பட்டு பாதுகாப்பு முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர்.

மாநிலம் முழுவதும் 20 ஆயிரம் கோடி ரூபாய் அளவுக்கு பெருஞ்சேதம் ஏற்பட்டுள்ளதாக முதல்வர் பினராயில் விஜயன் தெரிவித்துள்ளார். இந்த நிலையில் கேரளாவில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளை நேற்று நேரில் ஆய்வு செய்த பிரதமர் மோடி, உடனடி நிவாரண நிதியாக ரூ.500 கோடி வழங்குவதாக அறிவித்தார். இந்த நிலையில் மத்திய அரசு உட்பட பல்வேறு மாநிலங்களும் கேரள மாநிலத்துக்கு உதவிக்கரம் நீட்டி வருகின்றன.


அந்தவகையில், வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட கேரள மாநிலத்துக்கு, மேற்கு வங்காளம் மாநிலம் சார்பில் 10 கோடி ரூபாய் வழங்குவதாக முதல் மந்திரி மம்தா பானர்ஜி இன்று அறிவித்துள்ளார். இதுகுறித்து தனது டுவீட்டர் பக்கத்தில் கூறியுள்ள அவர், கேரளாவில் வாழும் சகோதர, சகோதரிகளில் வாழ்க்கை விரைவில் இயல்பு நிலைக்கு திரும்ப வேண்டும் என பிரார்த்தித்து கொள்வதாக குறிப்பிட்டுள்ளார்.

அடுத்த செய்தி