ஆப்நகரம்

வெள்ளத்தால் வந்த இழப்புகளுக்கு மத்திய அரசே காரணம்: மம்தா காட்டம்

மேற்கு வங்க மாநிலத்தில் மழை வெள்ளத்தால் ஏற்பட்டிருக்கும் இழப்புகளுக்கு மத்திய அரசின் அலட்சியப் போக்கே காரணம் என்று அம்மாநில முதல்வர் மம்தா பானர்ஜி குற்றம்சாட்டிள்ளார்.

TNN 28 Jul 2017, 10:11 am
மேற்கு வங்க மாநிலத்தில் மழை வெள்ளத்தால் ஏற்பட்டிருக்கும் இழப்புகளுக்கு மத்திய அரசின் அலட்சியப் போக்கே காரணம் என்று அம்மாநில முதல்வர் மம்தா பானர்ஜி குற்றம்சாட்டிள்ளார்.
Samayam Tamil mamata banerjee blames centre for not doing enough to prevent floods in bengal
வெள்ளத்தால் வந்த இழப்புகளுக்கு மத்திய அரசே காரணம்: மம்தா காட்டம்

மேற்கு வங்க மாநிலத்தில் கடந்த சில வாரங்களாக கனமழை பெய்ததால் ஏற்பட்ட வெள்ளத்தில் இதுவரை 16 பேர் உயிரிழந்துள்ளனர். 160 கிராமங்களில் சுமார் 20 லட்சம் பேர் உடைமைகளை இழந்துள்ளனர்.

இந்நிலையில், மேற்கு வங்கத்தில் ஹைவுரா மாவட்டத்தில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளை நேரில் பார்வையிட்ட அம்மாநில முதல்வர் மம்தா பானர்ஜி, மழை வெள்ளத்தினால் ஏற்பட்டுள்ள இழப்புகள் மத்திய அரசின் அலட்சித்தினால் வந்தவை என்றார். தாமோதர் ஆற்றில் கட்டப்பட்டுள்ள அணைகளிலிருந்து அதிகப்படியான தண்ணீர் வெளியேற்றப்பட்டதே வெள்ளப்பெருக்குக்கு ஏற்பட்ட வழிகுத்திருக்கிறது." என்றும் அவர் குறிப்பிட்டார்.

அடுத்த செய்தி