ஆப்நகரம்

ஓகே... கோயில்களை திறந்துக்குங்க: முதல்வர் அதிரடி அறிவிப்பு!!

மேற்கு வங்க மாநிலத்தில் ஜூன் 1 ஆம் தேதி முதல் வழிப்பாட்டுத் தலங்கள் திறக்கப்படும் என்று அந்த மாநில முதல்வர் மம்தா பானர்ஜி அதிரடியாக அறிவித்துள்ளார்.

Samayam Tamil 29 May 2020, 6:23 pm
கொரோனா வைரஸ் பரவல் தடுப்பு நடவடிக்கையாக, நாடு முழுவதும் மார்ச் 16 ஆம் தேதி முதல் அனைத்து வழிபாட்டுத் தலங்களும் மூடப்பட்டுள்ளன. மூன்றாவது முறையாக, மே 31 ஆம் தேதிவரை நீட்டிக்கப்பட்டுள்ள பொது முடக்கம், பல்வேறு தளர்வுகளுடன் மீண்டும் சில வாரங்களுக்கு நீட்டிக்கப்படும் எனத் தெரிகிறது.
Samayam Tamil mamta


இந்த நிலையில், மேற்கு வங்க மாநிலத்தில் உள்ள கோயில்கள், மசூதிள், குருத்வாராக்கள் என அனைத்து வழிபாட்டுத் தலங்களும் ஜூன் 1 ஆம் தேதி முதல் திறக்கப்படும் என்று அந்த மாநில முதல்வர் மம்தா பானர்ஜி இன்று (மே 29) அதிரடியாக அறிவித்துள்ளார்.

அதேசமயம் வழிப்பாட்டு தலங்களில் கூட்டம் கூட அனுமதி இல்லையெனவும், ஒரே நேரத்தில் 10 பேருக்கு மேல் வழிபாட்டுத் தலங்களுக்குள் செல்ல அனுமதி கிடையாது எனவும் மம்தா தெரிவித்துள்ளார்.

வெட்டுக்கிளிகளை அழிச்சிட்டோம்; அதுவும் 50 சதவீதம் காலி - கெத்து காட்டும் மாநில அரசு!

இதேபோன்று, மாநிலத்தில் உள்ள அனைத்து அரசு மற்றும் தனியார் நிறுவனங்கள் ஜூன் 8 ஆம் தேதி முதல் 100 சதவீதம் பணியாளர்களுடன் இயங்கும் என்றும் மம்தா கூறி.யுள்ளார்.

கர்நாடகத்தில் ஜூன் 1 ஆம் தேதி முதல் வழிபாட்டுத் தலங்கள் திறக்கப்படும் என்று அந்த மாநில அரசு ஏற்கெனவே அறிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

அடுத்த செய்தி