ஆப்நகரம்

வெள்ளநீரில் தத்தளித்த சிறுவன், காப்பாற்ற வந்த பனை மரம் - அடுத்து நடந்த ஆச்சரியம்!

கனமழையால் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கில் தனது உயிரைக் காப்பாற்ற சிறுவன் ஒருவன் அருகிலிருந்த பனை மரத்தின் மீது ஏறிக் கொண்டான். இவனை பல மணி நேரம் போராடி தீயணைப்பு வீரர்கள் மீட்டனர்.

Samayam Tamil 31 Aug 2020, 5:29 am
அசாம் மாநிலத்தில் பருவமழை புரட்டி எடுத்து வருகிறது. கடந்த சில நாட்களாக கொட்டித் தீர்த்த மழையால் எங்கு பார்த்தாலும் வெள்ளக்காடாய் காட்சி அளிக்கிறது. இதனால் அம்மாநில மக்கள் தத்தளித்துக் கொண்டிருக்கின்றனர். இவர்களை மீட்க தேசிய, மாநில பேரிடர் மீட்புப் படை, தீயணைப்புத்துறை உள்ளிட்ட வீரர்கள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். பைதரனி மற்றும் கங்குதி ஆறுகளில் அபாய கட்டத்தைத் தாண்டி வெள்ளம் பெருக்கெடுத்து ஓடிக் கொண்டிருக்கிறது. இதனால் ஆயிரக்கணக்கான ஏக்கர் விவசாய நிலங்கள் நாசமடைந்துள்ளன.
Samayam Tamil Floods Rescue


பத்ரக் மாவட்டத்தில் உள்ள 543 கிராமங்களைச் சேர்ந்த 1.5 லட்சம் மக்கள் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ளனர். தற்போது வரை வெள்ளநீரில் சிக்கி 12 பேர் பலியாகியுள்ளனர். இருவரைக் காணவில்லை. இதுபற்றி பத்ரக் மாவட்ட கூடுதல் மாவட்ட மேஜிஸ்டிரேட் ஷியாமா பக்தா கூறுகையில், எங்கள் மாவட்டத்தில் 7 மண்டலங்களில் 218 பஞ்சாயத்துக்கள் இருக்கின்றன.

புரட்டி எடுத்த கனமழை; ஒற்றைச் சுவரால் பலியான குழந்தைகள் - விபரீதமான விளையாட்டு!

அதில் 118 பஞ்சாயத்துகள் வெள்ளத்தால் பெரும் சிரமத்தைச் சந்தித்து வருகின்றன. இங்குள்ள 1,454 வீடுகள் முற்றிலும் சேதமடைந்துவிட்டன. அதிலிருந்து 3,858 பேர் மீட்கப்பட்டு 36 நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில் ஜெய்ப்பூர் மாவட்டம் ரசுல்பூர் பிளாக்கில் உள்ள கேஷாபூர் கிராமத்தில் பிரமானி ஆற்றின் வெள்ளநீர் உட்புகுந்துள்ளது.

இதிலிருந்து தப்பிக்க பொதுமக்கள் அங்குமிங்கும் ஓடியுள்ளனர். இந்நிலையில் 18 வயது சிறுவன் ஒருவன், வெள்ளநீரில் இருந்து தப்பிக்க அருகிலிருந்த பனை மரத்தின் மீது ஏறிக் கொண்டான். நேற்று முன்தினம் இரவு 9 மணியளவில் தான் சிறுவனைக் காணவில்லை என்று பெற்றோர் மற்றும் உறவினர்கள் தேடியுள்ளனர். இதுபற்றி பேரிடர் மீட்புப் படை, தீயணைப்புத்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

இதையடுத்து நடந்த தேடுதல் வேட்டையில் பனை மரத்தின் மீது சிறுவன் அமர்ந்திருப்பதைக் கண்டனர். உடனே விரைந்து சென்று தீயணைப்புத்துறையினர் சிறுவனை பாதுகாப்பாக மீட்டனர். தொடர்ந்து 18 மணி நேரம் பனை மரத்தின் மீது அமர்ந்தபடியே சிறுவன் தனது உயிரைக் காப்பாற்றிக் கொண்டுள்ளான். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

அடுத்த செய்தி