ஆப்நகரம்

போக்ஸோ சட்டத்தில் முதல் தூக்கு தண்டனை- ம.பி சிறுமி வன்கொடுமை வழக்கில் உத்தரவு

போக்ஸோ சட்டத்தில் திருத்தம் மேற்கொண்ட பிறகு முதல் மரண தண்டனை உத்தரவு மத்திய பிரதேச சிறுமி பாலியல் வன்கொடுமை வழக்கில் பிறப்பிக்கப்பட்டுள்ளது.

Samayam Tamil 8 Jul 2018, 3:23 pm
போக்ஸோ சட்டத்தில் திருத்தம் மேற்கொண்ட பிறகு முதல் மரண தண்டனை உத்தரவு மத்திய பிரதேச சிறுமி பாலியல் வன்கொடுமை வழக்கில் பிறப்பிக்கப்பட்டுள்ளது.
Samayam Tamil rape-trial-1531015440
போக்ஸோ சட்டத்தில் முதல் தூக்கு தண்டனை உத்தரவு


மத்திய பிரதேச மாநிலத்தில், 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் பாகீரத் பாட்டீல் (40) என்பவர் கடந்த மே 21ம் தேதி காவல்துறையால் கைது செய்யப்பட்டார்.

தொடர்ந்து மூன்று நாட்களாக குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்டு, சாட்சிகளிடம் விசாரணை மேற்கொண்டு வந்த நிலையில் நேற்றைய தினம் தீர்ப்பு வழங்கப்பட்டது.

அதன்படி, நாடே எதிர்பார்த்திருந்த இந்த வழக்கில் குற்றவாளி பாகீரத் பாட்டீலுக்கு கூடுதல் மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்ற நீதிபதி சூதன்சு சக்சேனா மரண தண்டனை வழங்கி உத்தரவிட்டார்.

கடந்த ஏப்ரல் மாதம் நடைபெற்ற அமைச்சரவை கூட்டத்தில் போக்ஸோ என்கிற சிறுவர்கள் பாலியல் வன்கொடுமை தடுப்பு சட்டத்தில், தண்டனையை அதிகரிப்பது குறித்து ஆலோசனை நடத்தப்பட்டது.

அதில், போக்ஸோ சட்டத்தில் கைது செய்யப்படும் குற்றவாளிக்கு அதிகப்பட்சமாக மரண தண்டனை வழங்கப்படும் வகையில் போக்ஸோ சட்டத்தில் திருத்தம் மேற்கொள்ள அமைச்சரவை ஒப்புதல் வழங்கியத.

இதனை அடுத்து, ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த ஒப்புதலுக்கு பிறகு கடந்த ஏப்ரல் 21ம் தேதி, போக்ஸோவில் திருத்தம் மேற்கொள்ளப்பட்ட திருத்தம் சட்டமாக மாறியது குறிப்பிடத்தக்கது.

அடுத்த செய்தி