ஆப்நகரம்

தியேட்டரில் தனி ஒருவனான இளைஞர்

பணத்தட்டுப்பாடு காரணமாக, வெறிச்சோடி காணப்பட்ட திரையரங்கில் ஒத்தையாக இளைஞர் ஒருவர் திரைப்படம் பார்த்துள்ளார்.

Samayam Tamil 11 Nov 2016, 6:32 pm
அகமதாபாத்: பணத்தட்டுப்பாடு காரணமாக, வெறிச்சோடி காணப்பட்ட திரையரங்கில் ஒத்தையாக இளைஞர் ஒருவர் திரைப்படம் பார்த்துள்ளார்.
Samayam Tamil man watched a movie alone in theatre during lack of currency notes
தியேட்டரில் தனி ஒருவனான இளைஞர்


கருப்பு பண ஒழிப்பு நடவடிக்கையாக, பிரதமர் மோடி ரூ.500. ரூ.1000 நோட்டுக்களை இனி செல்லாது என்று கூறினார். இதையடுத்து புதிய ரூ.500, ரூ.2000 நோட்டுக்கள் விரைவில் அறிமுகப்படுத்தப்படும் என்றும் தெரிவித்தார். இந்நிலையில் புதிய ரூபாய் நோட்டுக்களை மாற்றுவதற்காக ஏடிஎம்கள் கடந்த 2 நாட்களாக செயல்படாது என்று அறிவிக்கப்பட்டது.

Ahmedabad (Gujarat): Man watched a movie alone in theatre, as people avoid watching movies during lack of currency notes pic.twitter.com/05vq5KE1aO— ANI (@ANI_news) November 11, 2016 Sale of tickets has come down, this currency ban has impacted our business but we still support the initiative: Rakesh Patel (Theatre Owner) pic.twitter.com/0pwmZxrOtl— ANI (@ANI_news) November 11, 2016 இதனால் கையில் இருந்த பணம் செலவாகி, தேவைக்கு பணமின்றி பொதுமக்கள் திண்டாடி வருகின்றனர். வங்கிகளில் பணப்பரிமாற்றத்திற்காகவும், ஏடிஎம்களில் பணம் பெறுவதற்காகவும் கூட்டம், கூட்டமாக மக்கள் அவதிப்படுகின்றனர். இந்நிலையில் திரையரங்குகளில் படம் பார்ப்பவர்கள் எண்ணிக்கை கணிசமாக குறைந்துள்ளது. குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் உள்ள திரையரங்கு ஒன்றில், ஒருவர் மட்டும் டிக்கெட் வாங்கியுள்ளார். இதையடுத்து யாரும் வராததால், ஒருவருக்காக மட்டுமே திரைப்படம் போடப்பட்டது.

Man watched a movie alone in theatre during lack of currency notes.

அடுத்த செய்தி