ஆப்நகரம்

ககன்யான் திட்டம் இந்தியாவை சக்திவாய்ந்த நாடாக மாற்றும்: விண்வெளி வீரர்

7 முறை விண்வெளிக்கு சென்ற நாசாவின் முன்னாள் விண்வெளி வீரர் இந்தியாவின் ககன்யான்' திட்டத்தை வெகுவாக பாராட்டியுள்ளார்.

Samayam Tamil 19 Jan 2019, 5:04 pm
7 முறை விண்வெளிக்கு சென்ற நாசாவின் முன்னாள் விண்வெளி வீரர் இந்தியாவின் ககன்யான்' திட்டத்தை வெகுவாக பாராட்டியுள்ளார்.
Samayam Tamil sp


மும்பையில் உள்ள பர்டியூ பல்கலைக்கழகத்தின் 150வது ஆண்டு விழா நடைபெற்றது. இதில் பல முக்கியமான விண்வெளி வீரர்கள் கலந்துகொண்டனர். இந்த நிகழ்வில் கலந்துகொண்ட பர்டியூ பல்கலைக்கழகத்தின் முன்னாள் மாணவர் மற்றும் நாசாவின் முன்னாள் விண்வெளி வீரருமான ஜெரி ரோஸ் பேசியதாவது ‘மனிதர்களை விண்வெளிக்கு அனுப்பும், 'ககன்யான்' திட்டம் மிகவும் சிறப்பு வாய்ந்தது. விண்வெளியில் ஒருவர் பயணிக்கும்போது அவரின் மனம் வேறுவிதமாக செயல்படும். இந்த முயற்சியால் இந்தியா உலகளவில் ஒரு சக்தி வாய்ந்த நாடாக மாறும்.

பொறியியல், விஞ்சானம், தொழில்நுட்பம் மற்றும் கணித துறைகளில் மாணவர்களை அதிகம் ஊக்குவிக்க வேண்டும். இதனால் நம் பொருளாதாரத்தில் அதிக வளர்ச்சி ஏற்படும். முன்புபோல் அமெரிக்காவால் விண்வெளி கண்டிபிடிப்புகளில் செயல்படமுடியவில்லை. இதற்கு முக்கிய காரணம் அங்கும் அடிக்கடி மாற்றப்படும் அரசு மற்றும் கொள்ளைகள். நிச்சயமாக அமெரிக்காவுக்கு முன்பே சீனா நிலவில் மனிதர்களை குடியமர்த்தும் முயற்சிகளில் வெற்றியடையும். இதன்மூலம்ஒரு விண்வெளி போட்டி மேலும் சுவாரஸ்யமடையும்’’

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

நாசாவின் முன்னாள் விண்வெளி வீரரான ஜெரி ரோஸ் மொத்தம் 58 மணிநேரம் 18 நிமிடங்கள்வரை விண்வெளியில் இருந்து சாதனை படைத்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

அடுத்த செய்தி