ஆப்நகரம்

மூழ்கடிக்கும் வெள்ளத்தில் இறங்கி மீட்பு பணி செய்த மணிப்பூர் ஐஏஎஸ் அதிகாரி!

வெள்ள நீரில் மீட்பு பணியில் ஈடுபட்ட ஐஏஎஸ் அதிகாரிக்கு பாராட்டுக்கள் குவிகின்றன.

Samayam Tamil 16 Jun 2018, 2:46 pm
இம்பால்: வெள்ள நீரில் மீட்பு பணியில் ஈடுபட்ட ஐஏஎஸ் அதிகாரிக்கு பாராட்டுக்கள் குவிகின்றன.
Samayam Tamil Manipur IAS Officer
ஐஏஎஸ் அதிகாரி மீட்பு பணி


வடகிழக்கு மாநிலங்களில் ஒன்றான மணிப்பூரில் கனமழையால் பெருவெள்ளம் ஏற்பட்டுள்ளது. இதனால் லட்சக்கணக்கான பொதுமக்கள் வீடுகளை இழந்து தவித்து வருகின்றனர். இதையடுத்து மீட்பு மற்றும் நிவாரணப் பணிகளை மாநில அரசு முடுக்கி விட்டுள்ளது.

இந்நிலையில் மணிப்பூர் மாநில வெள்ளத் தடுப்புத் துறைச் செயலாளர் திலீப் சிங், தானே களத்தில் இறங்கி மீட்பு பணிகளில் ஈடுபட்டார். இது சமூகவலைத்தளங்களில் வைரலாகி, அவருக்கு பாராட்டுக்கள் குவிந்த வண்ணம் உள்ளன.

திலீப் சிங் மார்பளவு தண்ணீரில் இறங்கி, வெள்ளத்தில் சிக்கிய மக்களை பாதுகாப்பாக மீட்டார். மேலும் அவர்களுக்கு நிவாரண உதவிகளையும் வழங்கினார். இதையடுத்து மணிப்பூர் நீர் மேலாண்மைத் துறை அமைச்சர் லெட்போ ஹாக்கிப் பாராட்டு தெரிவித்துள்ளார்.

இதேபோல் டுவிட்டரில் பாராட்டியுள்ள பாலிவுட் நடிகர் போமன் இரானி, சாமானிய மக்களுக்கு வெள்ள நீரில் இறங்கி உதவி செயல் பாராட்டுக்குரியது என்று குறிப்பிட்டுள்ளார்.

மேலும் மணிப்பூர் முதல்வர் நாங்தொம்பன் பைரன் வெளியிட்டுள்ள பதிவில், மணிப்பூரில் வெள்ளம் கரைபுரண்டு ஓடியது. முதல்வர், எம்.எல்.ஏக்கள், அமைச்சர்கள், ஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகாரிகள் என அனைவருமே களத்தில் உள்ளோம் என்று குறிப்பிட்டுள்ளார்.

மணிப்பூரில் கடந்த ஒரு வாரமாக பெய்து வரும் மழையால் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

Manipur IAS Officer praised for leading flood relief work.

அடுத்த செய்தி