ஆப்நகரம்

கொரோனா அச்சம்: நாளை முதல் முழு பொதுமுடக்கம்!!

கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்தும் நோக்கில், மணிப்பூரில் நாளை முதல் இரண்டு வாரங்களுக்கு முழு பொதுமுடக்கம் அமலில் இருக்கும் என்று அந்த மாநில அரசு அதிரடியாக அறிவித்துள்ளது.

Samayam Tamil 22 Jul 2020, 7:27 pm
வடகிழக்கு மாநிலமான மணிப்பூரில் இதுநாள்வரை மொத்தம் 2, 015 பேருக்கு கொரோனா நோய்த்தொற்று கண்டறியப்பட்டுள்ளது. இவர்களில் 631 பேர் மட்டுமே தற்போது சிகிச்சையில் உள்ளனர்.
Samayam Tamil corona manipur


இருப்பினும், கொரோனா தொற்று பரவலை கருத்தில் கொண்டு, நாளை மதியம் (ஜூலை 23) 2 மணி முதல் அடுத்த இரண்டு வாரங்களுக்கு மாநிலம் முழுவதும் முழு பொதுமுடக்கம் அமல்படுத்தப்படும் என்று மணிப்பூர் மாநில அரசு இன்று அதிரடியாக அறிவித்துள்ளது.

நாடு முழுவதும் தற்போது பல்வேறு கட்டுப்பாடுகள், தளர்வுகளுடன் பொதுமுடக்கம் அமலில் உள்ளது. ஜூலை 31 ஆம் தேதி வரை இந்த நிலை இருக்கும் (unlock 2.0) எனவும், தங்களது மாநிலத்தில் கொரோனா நிலவரம் பொறுத்து அந்தந்த மாநிலங்கள் இதனை அமல்படுத்துவது குறித்து முடிவு செய்து கொள்ளலாம் என்று மத்திய உள்துறை அமைச்சகம் தெரிவித்திருந்தது.

நான்கில் ஒருவருக்கு கொரோனா: அதிர்ச்சி தகவல்!

இதன்படி, கொரோனா கட்டுப்பாட்டு பகுதிகளை தவிர, மாநிலத்தின் பிற அனைத்து பகுதிகளிலும் இன்று முதல் (ஜூலை 22) பொதுமுடக்கம் நீக்கப்படுவதாக கர்நாடக மாநில முதல்வர் எடியூரப்பா நேற்று அதிரடியாக அறிவித்தார்.

தமிழகத்தில் ஜூலை 31 ஆம் தேதி வரை அறிவிக்கப்பட்டுள்ள பொதுமுடக்கத்தை மேலும் நீட்டிக்க வாய்ப்பில்லை என்று முதல்வர் எடப்பாடி பழனிசாமி அண்மையில் தெரிவித்திருந்தார்.

அடுத்த செய்தி