ஆப்நகரம்

20 வருடத்திற்கு முன் நான் தற்கொலை செய்திருப்பேன்..! தற்போது பைக்கில் சந்தோசமாக சுற்றுகிறேன்..

உலக தற்கொலை தடுப்பு தினத்தையொட்டி தங்களது அனுபவங்களை பலரும் இணைய தளத்தில் பகிர்ந்து வருகின்றனர்.

Samayam Tamil 10 Sep 2019, 4:29 pm
உலக தற்கொலை தடுப்பு தினம் ஒவ்வொரு ஆண்டும் செப்டம்பர் 10 ஆம் தேதி அனுசரிக்கப்பட்டு வருகிறது. இதற்கான விழிப்புணர்வுகள் சர்வதேச தற்கொலை தடுப்பு கூட்டமைப்பு ஒவ்வொரு ஆண்டும் நடத்தி வரும். தற்கொலை என்பது வியாதி அல்ல அது ஒரு செயல் அதை எளிமையாக தவிர்க்க முடியும் என்பதை உணர்த்தவே தற்கொலை தினம் கடைப்பிடிக்கப்படுகிறது.
Samayam Tamil 6u6676


தற்கொலையைத் தூண்டும் எதிர்மறை சிந்தனைகளை உடைக்க உலகில் உள்ள பலரும் தங்களுடைய கசப்பான அனுபவங்கள் மூலம் நேர்மறை சிந்தனைகளை இன்டர்நெட்டில் விதைத்து வருகின்றனர். அதில் ஒரு சிலவற்றைப் பார்ப்போம்.


''மேட் ஹய்க்'' என்ற நபரின் டுவிட்டர் பதிவு. 20 வருடங்களுக்கு முன்பு இவர் தற்கொலை முயற்சியில் ஈடுபட்டிருக்கிறார். ஆனால் அதிர்ஷ்டவசமாக அந்த முடிவை மாற்றியுள்ளார்... தனக்கென்று ஒரு வாழ்க்கை கிடையாது... எனக்குச் சந்தோஷமும் கிடைக்காது என இப்படியெல்லாம் நினைத்த மேட் ஹய்க், தற்போது பிரான்சில் தனது குடும்பத்துடன் சந்தோசமாக வாழ்ந்து வருகிறார்....

இவரது அனுபவத்தில் கூறுவது என்னவென்றால் '' சாத்தியமற்றதும் சாத்தியமாகும் நாம் வாழ்ந்துகொண்டிருக்கையில்''



மற்றொருவர் ஒரு மேற்கோளைக் கூறியிருக்கிறார்.. அதில் '' தற்கொலை எண்ணத்தால் நீங்கள் இறக்க விரும்பவில்லை. உங்கள் நினைவுகளைத்தான் கொள்ள நினைக்கிறீர்கள்.. தரத்துடன் வாழ்ந்து கொண்டு இருக்கிறீர்கள்.. நீங்கள் அனைவராலும் நேசிக்கப்படுவீர்கள்.. இந்த சிந்தனையிலிருந்து ஒருபோதும் மாறுபட வேண்டாம்'' இவ்வாறு பதிவிட்டுள்ளார்.


''டிம் மெக்கென்னா'' என்ற நபர் அவரது அனுபவத்தைப் பகிர்ந்துள்ளார்.
அதில், '' கடந்த மார்ச் மாதம் நான் மனநல சிகிச்சை பெற்று வந்தேன். அப்போதே தற்கொலை செய்ய முயன்றுள்ளேன். ஆனால் இன்று தன்னுடைய பைக்கில் சந்தோசமாகச் சுற்றி வருகிறேன்.. எனக் கூறியிருக்கிறார்.

வாழ்க்கையில் சிரமங்கள் இருக்கும். தொடர்ந்து சென்று கொண்டிருங்கள்.. அது மிருகத்தனமானதுதான் ஆனால் அதற்குள் அழகும் ஒளிந்திருக்கும்.. அதற்காகப் போராடுவதே தகுந்தது.

அடுத்த செய்தி