ஆப்நகரம்

மராட்டியர்களுக்கு இடஒதுக்கீடு- மஹாராஷ்டிராவில் தொடரும் முழு அடைப்பு போராட்டம்

மஹாராஷ்டிரரவில் மராட்டிய மக்களுக்கு அரசுப் பணி மற்றும் கல்வி துறையில் இட ஒதுக்கீடு, விவசாயக் கடன்கள் தள்ளுபடி, ஏழை மாணவர்களின் கல்விக்கடன் தள்ளுபடி உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, முழு கடையடைப்பு போராட்டம் 2வது நாளாக இன்றும் தொடர்கிறது.

Samayam Tamil 25 Jul 2018, 10:32 am
மஹாராஷ்டிரரவில் மராட்டிய மக்களுக்கு அரசுப் பணி மற்றும் கல்வி துறையில் இட ஒதுக்கீடு, விவசாயக் கடன்கள் தள்ளுபடி, ஏழை மாணவர்களின் கல்விக்கடன் தள்ளுபடி உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, முழு கடையடைப்பு போராட்டம் 2வது நாளாக இன்றும் தொடர்கிறது.
Samayam Tamil f2f44ccc-92e7-49de-a200-8d67bb742a55.
மஹாராஷ்டிராவில் இன்றும் தொடரும் முழு அடைப்பு போராட்டம்



அவுரங்காபாத் மாவட்டம் காய்காவ் கிராமத்தில் நடந்த மறியல் போராட்டத்தின் போது, மராட்டிய சமுதாயத்தை சேர்ந்தவர்கள் அங்குள்ள கோதாவரி ஆற்று பாலத்தில் அமைக்கப்பட்டு உள்ள தடுப்பு சுவரின் மீது ஏறி தற்கொலை செய்துகொள்ள போவதாக மிரட்டினர்.

அப்பொழுது திடீரென 28 வயது உடைய காகாசாகேப் ஷிண்டே என்ற வாலிபர் கோதாவரி ஆற்றில் குதித்தார். உடனே அவர் மீடக்கப்பட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் அவர் செல்லும் வழியிலேயே இறந்தார்.

இதையடுத்து நேற்றைய முழு அடைப்பு போராட்டத்தில் வன்முறை வெடித்தது. அவுரங்காபாத் நகரில் ஒரு வாகனத்தை வன்முறையாளர்கள் தீ வைத்துக் கொளுத்தினர். அப்போது நடைபெற்ற கல்வீச்சு சம்பவத்தில் காவலர் ஒருவர் உயிரிழந்தார்.

இந்நிலையில் மும்பை, புனே, நாக்பூர் உள்ளிட்ட பல்வேறு நகரங்களிலும் வாகனங்களின் மீது தாக்குதல்கள் நடைபெற்றுள்ளன. புனே-அவுரங்காபாத் நெடுஞ்சாலையில் 2வது நாளாக சாலை மறியல் போராட்டம் நீடிப்பதால் வாகனங்கள் நீண்ட வரிசையில் காத்திருக்கின்றன.

பள்ளி, கல்லூரிகள், மருத்துவமனைகள், அரசு அலுவலகங்கள் இயங்குவதில் எந்த பிரச்னையும் இல்லை. இருப்பினும் தேவைக்காக பயணப்படும் பொதுமக்களுக்கு பாதுகாப்பு வழங்குவதற்காக மும்பை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதி முழுவதும் காவலர்கள் குவிக்கப்பட்டுள்ளனர்.

அடுத்த செய்தி