ஆப்நகரம்

அப்போ உள்ளேன் ஐயா, இப்போ ஜெய் ஹிந்த்.!

பள்ளிகளில் வருகைப் பதிவேட்டின் போது மாணவர்கள் உள்ளேன் என்று சொல்வதற்கு பதிலாகஜெய்ஹிந்த்’ சொல்ல வேண்டும் என மத்திய பிரதேச மாநில கல்வித்துறை அமைச்சர் விஜய் ஷா உத்தரவு பிறப்பித்துள்ளார்.

TNN 13 Sep 2017, 5:24 pm
பள்ளிகளில் வருகைப் பதிவேட்டின் போது மாணவர்கள் உள்ளேன் என்று சொல்வதற்கு பதிலாக ‘ஜெய்ஹிந்த்’ சொல்ல வேண்டும் என மத்திய பிரதேச மாநில கல்வித்துறை அமைச்சர் விஜய் ஷா உத்தரவு பிறப்பித்துள்ளார்.
Samayam Tamil mathya pradesh educational minister vijay sha ordered to students says jaihinth in schools
அப்போ உள்ளேன் ஐயா, இப்போ ஜெய் ஹிந்த்.!


பள்ளி ஆசிரியர்கள் மற்றும் தலைமை ஆசிரியர்களுக்கான கூட்டம் மத்திய பிரதேச மாநிலம், சாட்னா மாவட்டத்தில் நடைபெற்றது. இதில் பங்கேற்ற அம்மாநிலத்தின் கல்வித்துறை அமைச்சர் விஜய் ஷா, மாணவர்களிடம் தேசப்பற்றை ஊட்டும் வகையில், வருகைப் பதிவேட்டின் போது ’ஜெய்ஹிந்த்’ சொல்லும் உத்தரவை பிறப்பித்தார்.

அக்டோபர் 1ம் தேதி முதல் சாட்னா மாவட்டத்தில் உள்ள தனியார் பள்ளிகளில் இந்த நடைமுறை அமல்படுத்தப் படும் என்று கூறிய அவர் முதலமைச்சர் சிவராஜ் சிங் சவுகானுடன் ஆலோசித்து, மாநிலம் முழுவதும் இதை கடைபிடிப்பதற்கான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தெரிவித்துள்ளார்.

Mathya Pradesh educational minister vijay sha ordered to students says jaihinth in schools.

அடுத்த செய்தி