ஆப்நகரம்

அரசு மருத்துவமனை அவலம்: நோயாளிக்கு சிகிச்சை அளிக்கும் துப்புரவு தொழிலாளர்

மருத்துவருக்குப் பதிலாக துப்பரவுப் பணியாளர் ஒருவர் நோயாளிக்கு சிகிச்சை அளித்து தையல் போட்ட அவலம் குஜராத்தில் நடத்திருக்கிறது.

Samayam Tamil 20 Aug 2018, 10:06 pm
மருத்துவருக்குப் பதிலாக துப்பரவுப் பணியாளர் ஒருவர் நோயாளிக்கு சிகிச்சை அளித்து தையல் போட்ட அவலம் குஜராத்தில் நடத்திருக்கிறது.
Samayam Tamil DlCKJGJU8AE77-e


குஜராத் மாநிலம் பரூச்சில் உள்ள அரசு மருத்துவமனையில் நோயாளி ஒருவருக்கு மருத்துவமனையின் துப்புரவுப் பணியாளர் தலையில் தையல் போட்டு சிகிச்சை அளிக்கும் வீடியோ சமூக வலைத்தளங்களில் பரவி வருகிறது.

மேலும், மருத்துவர்களும் நர்ஸ்களும் அருகில் இருக்கும் நிலையிலும் நோயாளிக்கு துப்புரவுப் பணியாளர் ஒருவர் சிகிச்சை அளிக்கும் காட்சி வீடியோவில் இடம்பெற்றிருக்கிறது.

இது குறித்து மருத்துவமனையின் மூத்த மருத்துவர் கூறுகையில், “இது குறித்து விசாரித்து வருகிறோம். விசாரணை முடிந்து இதைப் பற்றிய தகவலை அரசு உயர் அதிகாரிகளிடம் தெரிவித்து, உரிய நடவடிக்கை எடுக்கப்படும்” என தெரிவித்தார்.
இதே துப்புரவுப் பணியாளர் அண்மையில் மற்றொரு நோயாளிக்கு தையல் போட்டு சிகிச்சை அளித்தது பற்றியும் செய்தி வெளியானது நினைவூட்டத்தக்கது.

அடுத்த செய்தி