ஆப்நகரம்

மூழ்கிய மும்பை நகரம்

மும்பையில் வரலாறு காணாத அளவில் பெய்து வரும் கனமழையால் பொது மக்களின் இயல்பு வாழக்கை முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ளது.

TNN 30 Aug 2017, 8:54 am
மும்பையில் வரலாறு காணாத அளவில் பெய்து வரும் கனமழையால் பொது மக்களின் இயல்பு வாழக்கை முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ளது.
Samayam Tamil meteorolical centre warns heavy rainfall in mumbai
மூழ்கிய மும்பை நகரம்


மகாராஷ்டிரா மாநிலம், மும்பை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் தொடர்ந்து பெய்து வரும் பேய்மழையால் மும்பை நகரமே தத்தளித்து வருகிறது. மக்களின் பொது வாழ்க்கை முடங்கப்பட்டு பள்ளி,கல்லூரிகள் மற்றும் அலுவலகங்களுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. வாகன மற்றும் ரயில் போக்குவரத்து சேவை நிறுத்தப்பட்டு மும்பை நகரமே தனித்தீவாக மாறியிருக்கிறது.

கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு சென்னையை தாக்கிய வெள்ளத்தை போல் தற்போது மும்பையில் ஏற்பட்டுள்ள வெள்ளத்தால் பெரும் பொருட்சேதம் நிகழ்ந்திருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நிலையில் காற்றழுத்த தாழ்வுநிலை காரணமாக, தொடர்ந்து 48 மணி நேரத்திற்கு கனமழை பெய்யும் என அறிவிக்கப்பட்டுள்ளதால் பொதுமக்கள் வீட்டிலேயே பாதுகாப்பாக இருக்கும்படி கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது. மேலும் மிக மிக கனத்த மழை பெய்யக்கூடும் என்று தேசிய வானிலை ஆய்வு மையம் விடுத்துள்ள எச்சரிக்கையால் மும்பை வாசிகள் அச்சத்தில் ஆழ்ந்துள்ளனர்.

Meteorolical centre warns heavy rainfall in Mumbai.

அடுத்த செய்தி