ஆப்நகரம்

பெண்களின் டெல்லி மெட்ரோ இலவச பயணித்தை எதிர்க்கும் மெட்ரோ மேன்

மெட்ரோமேன் என அழைக்கப்படும் முன்னாள் டெல்லி மெட்ரோ தலைவரான ஸ்ரீதர், பிரதமர் மோடிக்கு எழுதியுள்ள கடிதத்தில், டெல்லி மெட்ரோவில் பெண்கள் இலவசமாக பயணிக்கலாம் என்ற அம்மாநில அரசின் சலுகை அறிவிப்பினை ஏற்றுக்கூடாது என வலியுறுத்தி உள்ளார். இதற்கான நிதிசுமையை டெல்லி மாநில அரசே ஏற்றுக்கொள்ளும் என்று அம்மாநில முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் கூறியிருந்தார்.

Samayam Tamil 15 Jun 2019, 1:26 pm
மெட்ரோமேன் என அழைக்கப்படும் முன்னாள் டெல்லி மெட்ரோ தலைவரான ஸ்ரீதர், பிரதமர் மோடிக்கு எழுதியுள்ள கடிதத்தில், டெல்லி மெட்ரோவில் பெண்கள் இலவசமாக பயணிக்கலாம் என்ற அம்மாநில அரசின் சலுகை அறிவிப்பினை ஏற்றுக்கூடாது என வலியுறுத்தி உள்ளார்.
Samayam Tamil 156058127865929


இதே பாணியில் மற்ற மாநிலங்களும் மெட்ரோ சலுகையை பின்பற்றும் ஆபத்தான முன்னுதாரணம் ஆகிவிடும் என்பதால் டெல்லி அரசின் அறிவிப்பை ஏற்க வேண்டாம் என வலியுறுத்தி உள்ளார்.

டெல்லி மாநிலத்தில் ஆட்சி பொறுப்பில் உள்ள ஆம் ஆத்மி அரசு லோக்சபா தேர்தல் படுதோல்விக்கு பின்னர் டெல்லியில் மெட்ரோ ரயில் மற்றும் பேருந்துகளில் பெண்கள் கட்டணம் இன்றி இலவசமாக பயணிக்கலாம் என்று அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

இதற்கான நிதிசுமையை டெல்லி மாநில அரசே ஏற்றுக்கொள்ளும் என்று அம்மாநில முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் கூறியிருந்தார்.

இதற்கு டெல்லி மெட்ரோ ரயில் நிறுவன முன்னாள் தலைவர் ஸ்ரீதரன் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். 1997ம் ஆண்டு முதல் 2011 ம ஆண்டுவரை டெல்லி மெட்ரோ தலைவராக இருந்த ஸ்ரீதரன், அதன்பின்னர் டெல்லி மெட்ரோ ரயில் நிறுவனத்தின் ஆலோசகராக உள்ளார். கேரளாவைச் சேர்ந்த இவர் தலைமையிலான குழுதான் 1964ம் ஆண்டு நிகழ்ந்த புயலில் பாதிக்கப்பட்ட பாம்பன் ரயில்வே பாலத்தை 46 நாளில் சீரமைத்தது.

இந்நிலையில் ஸ்ரீதரன், பிரதமர் நரேந்திரமோடி டெல்லி மெட்ரோ விவகாரத்தில் தலையிட வேண்டும் என கடிதம் எழுதியுள்ளார். "மத்திய அரசு மற்றும் டெல்லி அரசு இணைந்து . டெல்லி மெட்ரோ ரயில்சேவையை இயக்குகின்றன. இது ஒரு பங்குதாரரான டெல்லி அரசு மட்டும் முடிவெடுத்து, பெண்களுக்கு கட்டண சலுகை அளிப்பதை ஏற்க முடியாது. இதன் மூலம் டெல்லி மெட்ரோவை திவால் நிலைக்கு தள்ளிவிடும்.

டெல்லி மெட்ரோவின் முதல் பகுதி திறக்கப்படும்போது, டெல்லி மெட்ரோவில் எந்தவொரு சலுகைப்பயண கட்டணமும் வழங்கப்பட மாட்டாது என்ற உறுதியான முடிவை நான் எடுத்துக் கொண்டேன். இந்த நிலைப்பாடு வருவாய்களை அதிகரிக்க எடுத்தது, இதனால் சாதாரண குடிமக்களுக்கு மலிவு விலையில் மெட்ரோ கட்டணத்தை வழங்க முடிந்தது. அதே நேரத்தில் மெட்ரோ, JAICA- யிலிருந்து வாங்கிய கடன்களை திருப்பி செலுத்த போதுமான உபரி நிதியும் கிடைத்தது.

2002ம் ஆண்டு டிசம்பர் 23ம் தேதி டெல்லி மெட்ரோவின் முதல் பகுதி திறக்கும் போது அன்று பிரதமர் அடல் பிகாரி வாஜ்பாய் கூட டிக்கெட் எடுத்து டோக்கன் வாங்கி தான் பயணித்தார் என்பதை தங்களுக்கு நினைவுபடுத்த விரும்புகிறேன்.

இப்போது டெல்லி மெட்ரோவில் பெண்கள் கட்டணம் இன்றி இலவசமாக பயணிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பு நாட்டில் மற்ற நகரங்களில் இருக்கும் மெட்ரோவில் இதே போன்ற சலுகை முடிவு எடுக்கப்பதற்கான ஆபத்தான் முன்னுதாரமாகிவிடவும் வாய்ப்பு உள்ளது. மேலும் டெல்லி அரசின் இந்த அறிவிப்பின் காரணமாக டெல்லி மெட்ரோவுக்கு பெரிய வருவாய் இழப்பு ஏற்படும் என்ற நிலையில் இழப்பினை டெல்லி அரசு தரும் என கூறியுள்ளது. இது இன்றைக்கு 1000 கோடி ரூபாய் சம்பந்தப்பட்ட தொகையாகும். இதன் மூலம் மெட்ரோ ரயில் விரிவாக்கத்துக்கு உதவும். இதன் மூலம் கட்டணங்களையும் அதிகரிக்கலாம். எனவே டெல்லி அரசின் அறிவிப்புக்கு நீங்கள் ஒப்புக்கொள்ளக்கூடாது" இவ்வாறு ஸ்ரீதரன் கடிதத்தில் கூறியுள்ளார்.

அடுத்த செய்தி