ஆப்நகரம்

கழிப்பறையில் மதிய உணவு: அரசுப் பள்ளியில் அவலம்

மத்தியப் பிரதேசத்தில் உள்ள அரசுப் பள்ளியில் மதிய உணவு கழிப்பறையில் தயாரிக்கப்படுவது தெரியவந்துள்ளது

Samayam Tamil 25 Apr 2018, 2:32 pm
மத்தியப் பிரதேசத்தில் உள்ள அரசுப் பள்ளியில் மதிய உணவு கழிப்பறையில் தயாரிக்கப்படுவது தெரியவந்துள்ளது
Samayam Tamil sezeWcgdbefbg


மத்தியப் பிரதேச மாநிலம் தாமோ மாவட்டத்தில் உள்ளது முடா என்னும் கிராமத்தில் ஆரம்பப் பள்ளியும் நடுநிலைப் பள்ளியும் ஒரே வளாகத்தில் உள்ளன. இவற்றில் மாணவர்களுக்கான மதிய உணவு தயாரிப்பதற்கான சமையல் அறை ஆரம்பப் பள்ளிக்கு மட்டுமே உள்ளது. அந்த பள்ளி மாணவர்களுக்கான மதிய உணவு அங்கே சமைக்கப் படுகிறது.

இங்குள்ள மகளிர் சுய உதவிக் குழு மாணவர்களுக்கான மதிய உணவை சமைத்து வழங்குகிறது. அக்குழுவிலிருந்து ஒரு பெண் நடுநிலைப் பள்ளிக்கு சமைப்பதற்கான இடம் இல்லாதது குறித்து நடுநிலைப் பள்ளியின் முதல்வரிடம் புகார் கொடுத்துள்ளார். அவர் சமையலறை கட்டப்படும் வரை கழிப்பறையில் சமைக்கச் சொல்லி இருக்கிறார்.
இதனால், இரண்டு மாதங்களுக்கு மேல் நடுநிலைப்பள்ளிக்கான மதிய உணவு கழிப்பறையில் தயாராகிறது. நடுநிலைப் பள்ளிகான சமையல் அறை கட்டுவதை அதற்கான ஒப்பந்ததாரரால் தட்டிக்கழித்துவிட்டதாக பள்ளி முதல்வர் பிரிஜேஷ் படேல் கூறியுள்ளார்.

அடுத்த செய்தி