ஆப்நகரம்

நடுவிரலைக் காட்டினால் ஜெயில்!

பெண்ணைப் பார்த்து நடுவிரலைக் காட்டினால் சிறை தண்டனை என்று கூறுகிறது சமீபத்தில் வெளியான நீதிமன்ற தீர்ப்பு.

Samayam Tamil 22 Sep 2019, 1:43 pm
டெல்லியைச் சேர்ந்த ஒருவர் தனது உறவினர் பெண்ணிடம் ஆபாசமான உடல்மொழியுடன் நடுவிரலைக் காட்டியுள்ளார் அத்துடன் உடல் ரீதியாகவும் தாக்கியுள்ளார்.
Samayam Tamil Untitled collage (6)


21 மே, 2014ஆம் ஆண்டு அப் பெண் இதுகுறித்து காவல்துறையில் புகார் அளித்துள்ளார். இதனால் அந்த நபர் மீது இந்திய தண்டனைச் சட்டம் 509, 323ன் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டது. 8 அக்டோபர் 2015ஆம் ஆண்டு நீதிமன்றம் அந்த நபருக்கு எதிராக குற்றச்சாட்டுகளை வகுத்தது. குற்றம்சாட்டப்பட்டவர் தனக்கு எதிரான குற்றங்கள் அனைத்தையும் மறுத்ததுடன் இது சொத்து தகராறு காரணமாக கூறப்பட்ட பொய் புகார் என்றார்.

தற்போது இந்த வழக்கை விசாரித்த பெருநகர மாஜிஸ்திரேட் வசுந்தரா ஆசாத், குற்றம் சாட்டப்பட்டவரின் நடவடிக்கைகள் ஒரு பெண்ணின் அடக்கத்தை சீற்றப்படுத்தும் நோக்கில் சொற்கள் அல்லது சைகைகளைச் செய்வதாகும் என்று கூறினார்.

இதனால் குற்றம் சாட்டப்பட்டவருக்கு அதிகபட்சமாக மூன்று ஆண்டுகள் சிறை தண்டனை கிடைக்க வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. இதன் தண்டனை விவரங்கள் செவ்வாய் கிழமை அன்று தெரியவரும்.

அடுத்த செய்தி