ஆப்நகரம்

பால் விலை லிட்டருக்கு 4 ரூபாய் குறைப்பு ... மதர் டைரி நிறுவனம் அதிரடி !!

தங்களின் தானியங்கி மையங்களில் அன்றாடம் பால் வாங்கும் வாடிக்கையாளர்களுக்கு, ஒரு லிட்டர் பால் விலையில் 4 ரூபாய் குறைக்கப்படுவதாக, "மதர் டைரி" நிறுவனம் இன்று அதிரடியாக அறிவித்துள்ளது. பிளாஸ்டிக் பயன்பாட்டை குறைக்கும் நோக்கில் இந்த சலுகை அறிவிக்கப்பட்டுள்ளதாகவும் அந்த நிறுவனம் தெரிவித்துள்ளது.

Samayam Tamil 1 Oct 2019, 9:32 pm
சுற்றுச்சூழலுக்கு பாதிப்புக்கு முக்கிய காரணமாக உள்ள ஒருமுறை பயன்படுத்தப்படும், மறுசுழற்சி செய்ய இயலாத பிளாஸ்டிக் பொருள்களின் உபயோகத்தை ஒழிப்பதற்கான விழிப்புணர்வு பிரசாரம், அக்டோபர் 2 -ஆம் தேதி நாடு முழுவதும் தொடங்கப்படும் என்று பிரதமர் நரேந்திர மோடி, ஐ.நா.சபையில் அண்மையில் பேசியபோது தெரிவித்தார்.
Samayam Tamil mdm


அதன்படி, காந்தியடிகளின் 150 -ஆவது பிறந்த தினமான நாளை, இவ்விழிப்புணர்வு பிரசாரத்தை பிரதமர் தொடங்கி வைக்கிறார்.

ரயில்வே துறை உள்ளிட்ட பல்வேறு பொதுத் துறை நிறுவனங்களும் இந்த முயற்சியை முன்னெடுக்க உள்ளன.

இந்த நிலையில், பிளாஸ்டிக் பயன்பாட்டை குறைக்கும் நோக்கில், தங்களது வாடிக்கையாளர்களுக்கு மதர் டைரி பால் விற்பனை நிறுவனம் அதிரடி சலுகை ஒன்றை இன்று அறிவித்துள்ளது.

அதாவது, சென்னை உள்பட நாடு முழுவதும் தங்களின் 900 தானியங்கி மையங்களில், மாதாந்திர அட்டைதாரர்கள் அன்றாடம் வாங்கும் பால் விலையில் 4 ரூபாய் குறைக்கப்படுகிறது.

இந்த விலை குறைப்பு உடனடியாக அமலுக்கு வருகிறது எனவும், பாக்கெட் பால் பயன்பாட்டை தங்களது வாடிக்கையாளர்கள் படிப்படியாக விட்டு விடுவார்கள் என்றும் அந்த நிறுவன நிர்வாகம் நம்பிக்கை தெரிவித்துள்ளது.

அடுத்த செய்தி