ஆப்நகரம்

கேரள விமான விபத்து காரணம் என்ன? -ஆராயும் மத்திய அரசு!

கேரளாவில் விபத்துக்குள்ளான விமானத்தின் கருப்புப் பெட்டிகள் மீட்கப்பட்டுள்ளதையடுத்து, இந்த விபத்துக்கான காரணம் ஆராயப்படும் என்று விமானப் போக்குவரத்துத் துறை அமைச்சர் ஹர்தீப் சிங் புரி தெரிவித்துள்ளார்.

Samayam Tamil 8 Aug 2020, 4:52 pm
கேரள மாநிலம், கோழிக்கோடு காரிப்பூர் சர்வதேச விமான நிலையத்தில் நேற்றிரவு நிகழ்ந்த கோர விபத்து குறித்து, மத்திய விமானப் போக்குவரத்துத் துறை அமைச்சர் ஹர்தீப் சிங் புரி இன்று நேரில் ஆய்வு செய்தார்.
Samayam Tamil flight crash


ஆய்வுக்கு பின் அவர், செய்தியாளர்களிடம் கூறியது:
விபத்துக்குள்ளான விமானத்தில் மொத்தம் 190 பேர் இருந்தனர். அவர்களில் 18 பேர் விபத்தில் உயிரிந்தனர். 149 பேர் ஏற்கெனவே மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இவர்களில் 23 பேர் சிகிச்சைக்குப் பின் வீடு திரும்பியுள்ளனர்.

சிகிச்சையில் உள்ளவர்களில் சிலர் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது. அவர்களில் மூன்று பேருக்கு செயற்கை சுவாசம் அளிக்கப்பட்டு வருகிறது என்று அமைச்சர் ஹர்தீப் புரி தெரிவித்தார்.

கேரள விமான விபத்து: உயிரிழந்தோர் குடும்பத்துக்கு மேலும் இழப்பீடுகள் அறிவிப்பு

"விமான விபத்து நடைபெற்ற இடத்தில் இருந்து விமானத்தின் இரண்டு கருப்புப் பெட்டிகள் கண்டெடுக்கப்பட்டுள்ளன. அவற்றில் பதிவாகியுள்ள காட்சிகளை ஆராய்ந்த பிறகே, இந்த விபத்துக்கான காரணம் தெரியவரும்" என்று அமைச்சர் கூறியுள்ளார்.

அடுத்த செய்தி