ஆப்நகரம்

ஹர்ஷ் வர்தனுக்கு சுற்றுச்சூழல் துறை கூடுதலாக ஒதுக்கீடு

மத்திய சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை அமைச்சர் அனில் மாதவ் தவே காலமானதையடுத்து அவர் பதவி வகித்து வந்த அமைச்சகம், ஹர்ஷ் வர்தனுக்கு கூடுதலாக ஒதுக்கப்பட்டுள்ளது.

PTI 18 May 2017, 1:48 pm
டெல்லி: மத்திய சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை அமைச்சர் அனில் மாதவ் தவே காலமானதையடுத்து அவர் பதவி வகித்து வந்த அமைச்சகம், ஹர்ஷ் வர்தனுக்கு கூடுதலாக ஒதுக்கப்பட்டுள்ளது.
Samayam Tamil minister harsh vardhan to hold additional charge of environment ministry
ஹர்ஷ் வர்தனுக்கு சுற்றுச்சூழல் துறை கூடுதலாக ஒதுக்கீடு


மத்தியப்பிரதேச மாநிலம் உஜ்ஜைனியைச் சேர்ந்த அனில் மாதவ் தவே, மத்திய சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை அமைச்சராக இருந்து வந்தார். அவருக்கு வயது 60. மத்தியப்பிரதேச மாநிலத்தில் இருந்து மாநிலங்களவை உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்ட அவர், உடல்நலக் குறைவால் திடீரென இன்று காலமானார். அவரது இறுதிச் சடங்கு நாளை நடைபெறவுள்ளது. தவே-வின் மரணத்தையடுத்து, இன்றும், இறுதிச் சடங்கு நடைபெறும் நாளிலும், தேசிய கொடியை அரைக் கம்பத்தில் பறக்க விட அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இந்நிலையில், அனில் மாதவ் தவே கவனித்து வந்த மத்திய சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறையானது, அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்துறை அமைச்சர் ஹர்ஷ் வர்தனுக்கு கூடுதலாக ஒதுக்கப்பட்டுள்ளது. இந்த தகவலை பிடிஐ செய்தி நிறுவனம் தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளது.

அனில் தவே குடும்பத்துக்கு இரங்கல் தெரிவித்துள்ள பிரதமர் மோடி, அவரது மறைவு தனக்கு தனிப்பட்ட முறையில் இழப்பு என்று குறிப்பிட்டுள்ளார்.
Science and Technology, Earth Sciences Minister #HarshVardhan to hold additional charge of Environment Ministry

அடுத்த செய்தி