ஆப்நகரம்

காவி உடை அணிவது தவறா? யோகி ஆதித்யாநாத் கேள்வி

எனக்கு பிடித்த காவி உடை அணிவது தவறா? என உத்தர பிரதேச முதல்வர் ஆதித்யாநாத் கேள்வி எழுப்பியுள்ளார்.

TNN 4 Apr 2017, 7:07 am
லக்னோ : எனக்கு பிடித்த காவி உடை அணிவது தவறா? என உத்தர பிரதேச முதல்வர் ஆதித்யாநாத் கேள்வி எழுப்பியுள்ளார்.
Samayam Tamil misconceptions due to my saffron clad look adityanath
காவி உடை அணிவது தவறா? யோகி ஆதித்யாநாத் கேள்வி


ஆதித்யாநாத் பேசியுள்ளதாவது:
எனக்கு பிடித்த நிறமான காவியில் உடையை அணிகின்றேன். நான் காவி உடை அணிவதால் நான் ஒரு குறிப்பிட்ட சமூகத்தினருக்கு மட்டும் சாதகமாக இருப்பேன் என்ற தவறான கருத்து பரப்பப்பட்டு வருகின்றன.

காவி உடை அணிவது தவறா?. நான் காவி உடை அணிந்தாலும் அனைவருக்கும் நான் பொதுவானவன் தான். என்னுடைய திறமையான ஆட்சி நிர்வாகத்தால் அனைத்துப் பிரிவினரிடமும் நன்மதிப்பு பெறுவேன் என கூறியுள்ளார்.

முன்னதாக நடிகையும், பத்திரிக்கையாளருமான டுவிங்கிள் கண்ணா ஆதித்யாநாத் குறித்த சர்ச்சை கருத்து தெரிவித்திருந்தார். அதில் “ஆசியன் பெயிண்ட் நிறுவனம் காவி நிறத்தை புதிய வண்ணமாக அறிவிக்க வேண்டும். காவி நிறம் தான் தற்போது புதிய நிறம்.” என குறிப்பிட்டிருந்தார்.

Asian paints must announce the new color of the season- 'Beguiling Saffron' with a tagline: Orange is the new Brown #UPset — Twinkle Khanna (@mrsfunnybones) March 19, 2017

அடுத்த செய்தி