ஆப்நகரம்

17 ஆண்டுகளுக்கு பிறகு, மிஸ் வோல்டு பட்டம் வென்று புது வரலாறு படைத்த இந்திய அழகி!

17 ஆண்டுகளுக்கு பின், மிஸ் வோல்டு பட்டத்தை இந்திய அழகி ஒருவர் வென்றுள்ளார்.

TNN 18 Nov 2017, 8:22 pm
சண்டிகர்: 17 ஆண்டுகளுக்கு பின், மிஸ் வோல்டு பட்டத்தை இந்திய அழகி ஒருவர் வென்றுள்ளார்.
Samayam Tamil miss india manushi chhillar wins miss world 2017
17 ஆண்டுகளுக்கு பிறகு, மிஸ் வோல்டு பட்டம் வென்று புது வரலாறு படைத்த இந்திய அழகி!


ஹரியானா மாநிலத்தைச் சேர்ந்த மனுஷி சில்லார்(20), மருத்துவப் பட்டப் படிப்பை பயின்று வருகிறார். இவர் சீனாவின் சன்யா சிட்டி அரினாவில் 108 நாடுகள் பங்கேற்ற மிஸ் வோல்டு அழகிப் போட்டியில் வென்று சாதனை படைத்துள்ளார்.

இவருக்கு 2016ஆம் ஆண்டு மிஸ் வோல்டு பட்டம் வென்ற போர்டா ரிகாவின் ஸ்டீபனி டெல் வல்லே, மகுடம் சூட்டி கௌரவித்தார்.

கடந்த 1966ஆம் ஆண்டு வரை எந்தவொரு ஆசியப் பெண்ணும், மிஸ் வோல்டு பட்டம் வென்றதில்லை. இந்நிலையில் அதே ஆண்டு இந்தியாவைச் சேர்ந்த மருத்துவ மாணவி ரெய்தா ஃபரியா பட்டம் வென்று, புதிய வரலாறு படைத்தார்.

அதன்பிறகு இந்தியாவின் தலையெழுத்தே மாறியது. 30 ஆண்டுகள் கழித்து, ஐஸ்வர்யா ராய் மிஸ் வோல்டு பட்டம் வென்றார். இவரைத் தொடர்ந்து பிரியங்கா சோப்ரா, டயனா ஹைடன் உள்ளிட்டோர் உருவாகினர்.

இவர்களது வரிசையில் 67வது மிஸ் வோல்டு பட்டத்தை வென்று மனுஷி சில்லார் சாதித்துள்ளார்.

Miss India Manushi Chhillar wins Miss World 2017.

அடுத்த செய்தி