ஆப்நகரம்

பட்ஜெட் 2020: ஒவ்வொரு தமிழன் தலையிலும் ரூ.57,000 கடன் : மு.க.ஸ்டாலின்

நமக்கே தெரியாமல் நம் ஒவ்வொருவர் தலையிலும் 57,000 ரூபாய் கடன் உள்ளது என மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

Samayam Tamil 15 Feb 2020, 10:40 am
2020-21ஆம் நிதியாண்டுக்கான தமிழ்நாடு பட்ஜெட் நேற்று சட்டப்பேரவையில் தாக்கல் செய்யப்பட்டது. ஏறக்குறைய சுமார் 22000 கோடி ரூபாய் பற்றாக்குறையோடுதான் பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது. இந்நிலையில் எதிர்க்கட்சியினர் பலரும் இந்த பட்ஜெட் ஏமாற்றம் அளிப்பதாகத் தெரிவித்தனர்.
Samayam Tamil stalin press meet


ஏறக்குறைய சுமார் 3 மணி நேரம் 20 நிமிடங்கள் வாசிக்கப்பட்ட பட்ஜெட் உரையில் குறிப்பிடத்தக்க அறிவிப்புகள் ஏதும் இல்லை என்ற குற்றச்சாட்டைத் தொடர்ந்து, தமிழகத்தின் கடன் அதிகரித்திருக்கிறது என்பதும் எதிர்க்கட்சிகளால் விமர்சிக்கப்பட்டு வருகிறது.

இதுகுறித்து எதிர்க்கட்சித் தலைவர் ஸ்டாலின் தெரிவித்ததாவது, “2011 ஆம் ஆண்டு திமுக ஆட்சியில் இருந்தவரை தமிழக அரசின் கடன் ஒரு லட்சம் கோடி ரூபாய்தான்.

சென்னையில் தடியடி எதிரொலி... இராமநாதபுரத்திலும் சாலை மறியல்...

ஆனால் அதிமுக அரசின் 10 ஆண்டுகால ஆட்சியில் இப்போது 4.6 லட்சம் கோடியாக உயர்ந்துள்ளது. நமக்கே தெரியாமல் நம் ஒவ்வொருவர் தலையிலும் 57,000 ரூபாய் கடன் உள்ளது” எனத் தெரிவித்துள்ளார்.

மேலும் பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலம் குறித்த கடித விவகாரத்தில் வேறெந்த முன்னேற்றமும் ஏற்படவில்லை என்பதும் அரசியல் பார்வையாளர்களால் கேள்வி எழுப்பப்பட்டு வருகிறது.

அடுத்த செய்தி