ஆப்நகரம்

புதுவையில் துணைநிலை ஆளுநர் கிரண்பேடிக்கு எம்எல்ஏ எதிர்ப்பு

புதுச்சேரியில் ஆய்வு மேற்கொள்ள சென்ற துணை நிலை ஆளுநர் கிரண்பேடிக்கு எம்எல்ஏ ஒருவர் எதிர்ப்பு தெரிவித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

TNN 1 Jul 2017, 12:13 pm
புதுச்சேரி: புதுச்சேரியில் ஆய்வு மேற்கொள்ள சென்ற துணை நிலை ஆளுநர் கிரண்பேடிக்கு எம்எல்ஏ ஒருவர் எதிர்ப்பு தெரிவித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Samayam Tamil mla balan opposes lt governor kiranbedi near ulavrkarai
புதுவையில் துணைநிலை ஆளுநர் கிரண்பேடிக்கு எம்எல்ஏ எதிர்ப்பு


உழவர்கரை தொகுதியில் ஆய்வு மேற்கொள்ள சென்ற ஆளுநர் கிரண்பேடிக்கு, அந்த தொகுதி எம்எல்ஏ பாலன் கடும் எதிர்ப்பு தெரிவித்து அவரை தடுத்து நிறுத்தியுள்ளார். இதனால், பரபரப்பு நிலவியதையடுத்து, ஆளுநர் கிரண்பேடி அங்கிருந்து வெளியேறினார்.

இது குறித்து செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த ஆளுநர் கிரண்பேடி, புதுச்சேரியை தூய்மைப்படுத்தும் தனது பணி தொடரும். எம்எல்ஏக்கள் எதிர்ப்பு வழக்கமான ஒன்று தான், இதனை தான் பெரிதுபடுத்த விரும்பவில்லை என்று தெரிவித்துள்ளார்.

மேலும், புதுச்சேரி பேரவைக்கு நியமன 3 எம்எல்ஏக்களை நியமிக்கும் அதிகாரம் மத்திய அரசிடமே உள்ளது, இந்த விவகாரத்தில் தான் தலையிட்டதாக கூறுவது வதந்தி எனவும் கிரண்பேடி தெரிவித்தார்.

MLA Balan opposes Lt.Governor Kiranbedi near Ulavrkarai.

அடுத்த செய்தி