ஆப்நகரம்

ரூ. 5 கோடி மதிப்பிலான உயர்ரக கைப்பேசி மாடல்கள் கொத்து கொத்தாக பறிமுதல்

சென்னையிலிருந்து மும்பைக்கு விரைந்த சென்னை எக்ஸ்பிரஸ் அதிவிரைவு ரயிலில் ஆயிரக்கணக்கான உயர் ரக கைப்பேசி மாடல்களுடன், அதற்கான ஸ்கிராட்ச் கார்ட்டுகள், ஹெட்ஃபோன்கள் உள்ளிட்ட பல கடத்தல் பொருட்களை மும்பை சுங்கத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

Samayam Tamil 10 Apr 2018, 3:04 pm
சென்னையிலிருந்து மும்பைக்கு விரைந்த சென்னை எக்ஸ்பிரஸ் அதிவிரைவு ரயிலில் ஆயிரக்கணக்கான உயர் ரக கைப்பேசி மாடல்களுடன், அதற்கான ஸ்கிராட்ச் கார்ட்டுகள், ஹெட்ஃபோன்கள் உள்ளிட்ட பல கடத்தல் பொருட்களை மும்பை சுங்கத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
Samayam Tamil உயர்ரக கைப்பேசி மாடல்கள் கொத்து கொத்தாக மும்பையில் பறிமுதல்
உயர்ரக கைப்பேசி மாடல்கள் கொத்து கொத்தாக மும்பையில் பறிமுதல்


மொத்தமாக 10,000 மொபைல் ஃபோன்கள், 6000 ஹெட்ஃபோன்கள் மற்றும் 17,000 மொபைல் ஸ்கிராட்ச் கிராட்டுகள் ஆகியவற்றை மும்பை சுங்கத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்துள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சென்னையிலிருந்து மும்பைக்கு பயணிகள் மூலம் கடத்திவரப்பட்ட இந்த பொருட்கள் அனைத்தும் மும்பை சத்ரபதி சிவாஜி மஹாராஜ் ரயில்வே முனையம் அருகே ஒப்படைக்க கடத்தல்காரர்கள் திட்டமிட்டுயிருந்தனர்.

இந்த தகவலை முன்பே அறிந்திருந்த சுங்கத்துறை அதிகாரிகள், சம்பவ இடத்திற்கு விரைந்து, கடத்தல் பொருட்களையும், அவற்றை சென்னையிலிருந்து கொண்டு வந்த மானவ் என்பவரையும் கையும் களவுமான பிடித்தனர்.

இதுப்பற்றி பேசிய சுங்கத்துறை உதவி ஆணையாளர் தீபக் பண்டிட், கைதுசெய்யப்பட்டுள்ள மானவ் கடத்தல் பொருட்களை ஒரு டெம்போ வேன் மூலம் மும்பையின் பல்வேறு பகுதிகளுக்கு விநியோகிக்க திட்டமிட்டு இருந்தார். அதிகாரிகள் எடுத்த அதிரடி நடவடிக்கையின் காரணமாக தற்போது கடத்தல் திட்டம் முறியடிக்கப்பட்டு, மொபைல் பொருட்கள் கைப்பற்றப்பட்டுள்ளதாக அவர் கூறினார்.

1970 காப்புரிமை சட்டம் மற்றும் சுங்கச் சட்டம் 1962 ஆகியவற்றின் கீழ் மும்பை சுங்கத்துறை அதிகாரிகள் கடத்தல்காரர் மானவ் மீது வழக்குகளை பதிவு செய்துள்ளதாக முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

அடுத்த செய்தி