ஆப்நகரம்

12,000 கிலோ குப்பைகளை அகற்றிய 18 வயது இளைஞன்.மோடி நெகிழ்ச்சி.!

மான் கி பாத் நிகழ்ச்சியில் உரையாற்றிய பிரதமர் மோடி, காஷ்மீர் மாநிலத்தைச் சேர்ந்த 18 வயது இளைஞனை பாராட்டியுள்ளார்.

TNN 24 Sep 2017, 3:45 pm
மான் கி பாத் நிகழ்ச்சியில் உரையாற்றிய பிரதமர் மோடி, காஷ்மீர் மாநிலத்தைச் சேர்ந்த 18 வயது இளைஞனை பாராட்டியுள்ளார்.
Samayam Tamil modi appreciate the 18 year youngster eho removed the 12000 kilo carbage
12,000 கிலோ குப்பைகளை அகற்றிய 18 வயது இளைஞன்.மோடி நெகிழ்ச்சி.!


ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தின் பந்திபோரா மாவட்டத்தைச் சேர்ந்த 18 வயது இளைஞரான பிலால் தர், அங்கு குப்பைகளை அகற்றும் பணிகளை செய்து வருகிறார். அவ்வாறு சேகரித்த குப்பைகளை விற்பதன் மூலம் ரூ.150 முதல் 200 வரை வருமானமும் ஈட்டி வந்தார். கடந்த ஐந்து ஆண்டுகளாக இந்த பணியைச் செய்து வரும் பிலால் தர் இதுவரையிலும் 12,000 கிலோ குப்பைகளை அகற்றியுள்ளதாக கூறப்படுகிறது.

ஸ்ரீநகர் நகராட்சி, இவரது முயற்சியை பாராட்டியது மட்டுமல்லாமல் குடிமைத்தூதர் என்ற பொறுப்பையும் பிலால்-க்கு வழங்கியது. மேலும் சுற்றுச்சூழல் குறித்து மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்த இவருக்கு சீறுடையும், பிரச்சார வாகனமும் வழங்கப்பட்டது.

இந்த நிலையில் இன்று மான் கி பாத் நிகழ்ச்சியில், உரையாற்றிய பிரதமர் மோடி, தனது சொந்த முயற்சியால் தால் ஏரியிலிருந்து 12,000 கிலோ குப்பைகளை அகற்றிய பிலால் தரை பாராட்டி பேசியுள்ளார்.

Modi appreciate the 18 year youngster eho removed the 12,000 kilo carbage.

அடுத்த செய்தி