ஆப்நகரம்

மின் விநியோகத்தை மதப் பிரச்சினையாக மாற்றும் மோடி: அகிலேஷ் குற்றச்சாட்டு

மின் விநியோகத்தை மதப் பிரச்சினையாக பிரதமர் மோடி மாற்ற முயல்வதாக அகிலேஷ் குற்றம்சாட்டியுள்ளார்.

TNN 7 Mar 2017, 1:00 am
லக்னௌ: மின் விநியோகத்தை மதப் பிரச்சினையாக பிரதமர் மோடி மாற்ற முயல்வதாக அகிலேஷ் குற்றம்சாட்டியுள்ளார்.
Samayam Tamil modi makes power supply into religion issue says akhilesh
மின் விநியோகத்தை மதப் பிரச்சினையாக மாற்றும் மோடி: அகிலேஷ் குற்றச்சாட்டு


உத்தரப்பிரதேசத்தில் 7 கட்டங்களாக வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. நாளை 7வது மற்றும் கடைசி கட்ட வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. அதனால் அரசியல் கட்சிகள் தீவிர பிரசாரம் மேற்கொண்டன. நேற்று இறுதிக்கட்ட தேர்தல் பிரசாரம் நடைபெற்று முடிவுற்றது. ஜவுன்பூர் மாவட்டத்தில் சமாஜ்வாதி கட்சி சார்பில் அகிலேஷ் பிரசாரம் மேற்கொண்டார். அப்போது, தீபாவளி, ஹோலி போன்ற பண்டிகைகளை விட ரம்ஜான் பண்டிகைக்கு மாநில அரசு சார்பில் அதிக மின்சாரம் விநியோகம் செய்யப்படுவதாக பிரதமர் மோடி குற்றம்சாட்டியதை சுட்டி காட்டினார்.

மோடி மின்சாரப் பிரச்னையை இந்து-முஸ்லீம் பிரச்னையாக மாற்ற முயல்வதாக குற்றம்சாட்டினார். மாநில அரசு யாருக்கும் பாரபட்சம் இல்லாமல், ஒரே மாதிரியான நடவடிக்கையை பின்பற்றுவதாக அகிலேஷ் கூறினார். பொதுமக்கள் ஆதரவு சமாஜ்வாதி கட்சிக்கு தான் என்று நம்புவதாகவும் அவர் குறிப்பிட்டார்.

Modi makes Power supply into religion issue says Akhilesh.

அடுத்த செய்தி